பல்டி 1
சத்தீஸ்கர் மாநிலத்தில் போதைக்காக பயன் படுத்தும் நோக்கத்தில் “அபின்” பயிரிட்ட தாக பாஜக தலைவர் தமர்கர் மீது குற்றம் சாட் டப்பட்டுள்ளது. அவருடைய நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளார். அந்தப் பயிர்களுக்கு இடை யில் அபின் செடிகளும் வளர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் (காங்கிரஸ்), அந்த நிலத்திற்கே நேரில் சென்று அபின் செடிகளைப் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முட்டுக் கொடுத்து வந்த பாஜக, அவருக்கும், எங்களுக்கும் தொடர் பில்லை என்று பல்டி அடித்திருக்கிறார்கள். கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து விட்டார்களாம். இத்தனைக்கும் அவர்தான் மாநில விவசாயிகள் பிரிவின் தலைவராக இருக்கிறார்.
பல்டி 2
பாஜக ஆளும் மாநிலங்களில் “போலி”கள் அம்பலமாகாமல் ஒருநாள் கடந்து விட்டால் ஆச்சரியம்தான். அவர்கள் ஆட்சியில் இருக்கும் ஹரியானாவில் குர்கான் நகரத்தில் ஒரு போலி பள்ளியை நடத்தி வந்திருக்கிறார்கள். மத்திய கல்வி வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற பள்ளி என்று கூறிக்கொண்டு, வினய் கடாரியா என்பவர் அதன் பொறுப்பாளராக இருந்துள்ளார். அப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒரு வரின் பெற்றோருக்கு சந்தேகம் வந்து வாரி யத்தைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவர் களுக்குக் கிடைத்த பதில் அதிர்ச்சி அளித்தது. அந்தப்பள்ளிக்கு அங்கீகாரம் இல்லை. மிரண்டு போன அந்தப் பெற்றோர், பிற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் விஷயத்தைச் சொல்லி யிருக்கிறார்கள். அப்பள்ளி நடத்திய நிகழ்ச்சி களில் எல்லாம் பல பாஜகவினர் பங்கேற்றிருக்கி றார்கள். இப்போது அம்பலமானவுடன் எங்களுக் குத் தொடர்பில்லை என்று கை விரிக்கிறார்கள்.
பல்டி 3
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீது ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தன. அதற்கான அனு மதி கோரும் கடிதத்தில் கையெழுத் திட மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துவிட் டது. மக்களவையில் அக்கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ளனர். இது கடுமையான அதிருப்தியை எதிர்க்கட்சிகள் மத்தியில் உருவாக்கியது. ஒரு மாத காலம் ஓடி விட்டது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் பாஜக வுக்கு ஆதரவான இந்த நிலைப்பாடு மக்களிடம் எதிர்ப்பை உருவாக்கும் என்று ஆலோசர்கள் மம்தா பானர்ஜியிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இத னால் பல்டி அடித்து விடலாமா என்று அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட நெருக்கமான தலைவர்களிடம் மம்தா பேசி யுள்ளார். நிறைவில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது என்று அறிவித்து விட்டார்கள்.
பல்டி 4
நிதிஷ் குமார் தில்லிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கி றார். அவரது மகன் நிஷாந்த் மாநில அரசியலில் குதித்துள்ளார். இந்நிலையில் பீகாரின் இந்தியா கூட்டணி உற்சாகமடைந்துள்ளது. இவ்வளவு காலமாக பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைப் பெறுவதில் நிதிஷ் குமாரின் முகம் பெரிய அளவில் பாஜக கூட்ட ணிக்கு உதவியது. அந்த முகத்தைத் தில்லிக்குக் கடத்து வதன் மூலம் அந்தப் பகுதி மக்களை பாஜகவிடமிருந்து, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிப் பக்கம் தள்ளியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த இந்தியா கூட்டணிக் கட்சிகள், விரைவில் மக்கள் சந் திப்பை நடத்தி சமூக நீதிக்கான நிதிஷ் குமாரின் குரலை பாஜக அடக்கி விட்டது என்ற பிரச்சாரத்தை முன் வைக்கப் போகின்றன. நிதிஷ் குமாரின் புதல்வர் நிஷாந்தின் வருகை, பாஜகவின் வாரிசு அரசியல் என்ற பிரச்சாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. -கணேஷ்
