states

பீகாரில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

பீகாரில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

பாட்னா பீகாரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அம்மாநிலத்தில் இது வரை ஆறு  பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 11 முறை பத்திரி கையாளர்களின் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. பல  பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப் பட்டு  தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ளனர். மாநிலத்தில் இயங்கி வரு கின்ற முக்கிய நாளிதழ்களின் ஆசிரி யர்களுக்கு மிரட்டல்கள் விடப்படுவது டன், அவர்கள் மீது அவதூறு வழக்கு கள் பதிவது, அவர்களின் சமூக ஊட கப் பதிவுகளை தணிக்கை செய்வது என பல்வேறு வகையில் கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தப் பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு நிதிஷ் குமார்  மீண்டும் முதலமைச்சராக பதவியில்  அமர்ந்த பிறகு  பல பத்திரிகையா ளர்கள் இது போன்ற வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். 2019-20 ஆண்டுக்கான நிதி ஆயோக்  மாநில சுகாதாரக் குறியீட்டில், 19 பெரிய  மாநிலங்களில் பீகார் 18 ஆவது இடத்தில் இருந்தது.2025 மார்ச் மாதத்  தில் வெளியான நிதி ஆயோக் அறிக்கை, பீகாரில் பாலின விகிதம் (sex ratio) தேசிய சராசரியை விடக்  குறைவாக இருப்பதாகக் தெரிவித்தி ருந்தது. 2023-24 நிதி ஆயோக்கின்  நிலையான வளர்ச்சி இலக்கு குறி யீட்டில் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அளவுகோல்களில் பீகார்  மோசமான மாநிலமாக வகைப்படுத் தப்பட்டுள்ளது. குறைந்த எழுத்தறிவு, குறைந்த  தனிநபர் வருமானம் மற்றும் அதிக வேலையின்மை ஆகியவற்றால், லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒவ்  வொரு ஆண்டும் வாழ்வாதாரத்திற்  காக வேலை தேடி வேறு மாநிலங்க ளுக்குப் புலம்பெயர்கின்றனர். மிகக்  குறைவான அல்லது தொழிற்சாலை கள் இல்லாததால், அம்மாநிலத்தில் விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது.  இத்தகைய சூழலில் அரசின் ஊழல்,  மோசமான நிர்வாகம் பற்றி எழுது கிற, விமர்சனம் செய்கிற பத்திரிகையா ளர்கள் மீது கடும் தாக்குதல் நடத் தப்பட்டு வருகிறது.  நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய  ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பிறகு ஊடகங்கள் மீதான ஒடுக்கு முறை மேலும் அதிகரிக்க துவங்கியது.  குறிப்பாக சமூக ஊடகங்கள் அது சார்ந்து இயங்கும் சுயாதீனப்  பத்திரிகை யாளர்களின் மீது தாக்குதல்கள் நடத் தப்பட்டுள்ளன.  பீகார் மாநிலம் தொடர்ந்து மோச மான வறுமையுடைய, வேலைவாய்ப்பு இல்லாத,  குறைந்த சமூக-பொருளா தாரக்  குறிகாட்டிகளுடன் உள்ளது. குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்விக் கான வசதிகளில் மிகவும் பின்தங்கிய மாநிலமாகவும் அது உள்ளது.