அணுசக்தி வணிகத்திற்காக புதிய நிறுவனத்தை தொடங்கினார் அதானி “ஷாந்தி மசோதாவை” நிறைவேற்றிய மோடி அரசின் நோக்கம் மீண்டும் அம்பலமானது
புதுதில்லி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் “நிலையான பயன் பாடு மற்றும் இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தி மேம்பாடு (ஷாந்தி - Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India - SHANTI) மசோதா, 2025”-ஐ “இந்தியா” கூட்டணிக் கட்சிக ளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மோடி அரசு நிறைவேற்றியது. 1962ஆம் ஆண்டின் அணுசக்தி சட்டம் மற்றும் 2010ஆம் ஆண்டின் அணுசக்தி சேதத் திற்கான சிவில் பொறுப்புச் சட்டம் (CLND) ஆகிய வற்றை மாற்றியும் ; அணுசக்தி துறையில் தனி யார் நிறுவனங்கள், அணுமின் நிலையங்களை நிர்வகிக்கவும், முதலீடு செய்யவும் ; விபத்து ஏற்பட்டால் ஆபரேட்டர்கள் (இயக்குநர்கள்) முழு பொறுப்பேற்க வேண்டும் என்ற திருத்தம் மற்றும் மாற்றங்களுடன் ஷாந்தி மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா விவாதத்தின் போதே மக்களவை, மாநிலங்களவையில், “நாட்டின் அணுசக்தித் துறையை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்து விடவே மோடி அரசு ஷாந்தி மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி எம்.பி., க்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்புக்கு மத்தியில், ஷாந்தி மசோ தாவை நிறைவேற்றிய ஒரே வாரத்தில் அணு சக்தி துறையை கைப்பற்றும் வேலையை துவங்கினார் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் 200 மெகாவாட் திறன் கொண்ட 8 சிறிய மாடுலர் அணு உலைகளை அமைக்க அதானி குழுமம் வேலையை துவங்கியது. தனி நிறுவனமே தொடங்கிய அதானி இந்நிலையில், அதானி குழுமம் அணுசக்தி வணிகத்திற்காக ‘அதானி அட்டாமிக் எனர்ஜி லிமிடெட் (AAEL - Adani Atomic Energy Ltd)’ என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளது. இது தொடர்பாக அதானி பவர் நிறுவனம் (அதானி குழுமத்தின் துணை நிறுவனம்) வெளி யிட்டுள்ள அறிக்கையில், “அணுசக்தி அல்லது அணு ஆற்றல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும் அதானி அட்டாமிக் எனர்ஜி லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை நிறுவியுள்ளோம். இந்த நிறுவனம் ரூ. 5,00,000 அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தலா ரூ. 10 மதிப்புள்ள ரூ.50,000 சாதார ணப் பங்குகளைக் கொண்டது. இந்த நிறுவ னத்தின் 100 சதவீதப் பங்குகளையும் அதானி பவர் நிறுவனம் கொண்டுள்ளது. 2026ஆம் ஆண்டு பிப்., 11ஆம் தேதி பதிவு செய்யப் பட்டது” என அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் “ஷாந்தி மசோதாவை” நிறைவேற்றிய மோடி அரசின் நோக்கம் மீண்டும் அம்பல மானது என்பது குறிப்பிடத்தக்கது.
