கோழிக்கோடு பல்கலைக்கழ கத்தின் நான்கு ஆண்டு இளங்கலை மாணவர் கள் வேடனின் ராப் இசையையும், கௌரி லட்சுமியின் கதகளி இசையையும் படிப் பார்கள். ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த வேந்தர் (ஆளுநர்) இரண்டு பாடங்களை யும் தவிர்க்க எடுத்த முயற்சிகளுக்கு அடி பணிய மாட்டோம் என்று சிண்டிகேட் தெளிவுபடுத்தியது. வேடனின் ராப் இசையையும் கௌரி லட்சுமியின் கதகளி பாடல்களும் அடங் கிய பாடத்தைத் தவிர்க்க வேண்டிய அவ சியமில்லை என்று படிப்பு வாரிய (போர்டு ஆப் ஸடடீஸ்) அதிகாரிகளும் தெரிவித்த னர். தற்காலிக துணைவேந்தர் டாக்டர் பி. ரவீந்திரனைப் பயன்படுத்தி பாஜக, காங்கி ரஸ் மற்றும் எஸ்யூசிஐ கூட்டாக தயாரித்த நாடகத்திற்கு திரையிடப்பட்டுவிட்டது. 4 ஆண்டு இளங்கலை பாடத்தின் மூன்றாவது செமஸ்டர் பாடத்திட்டத்தில், வேடனின் ராப் இசை பாடலான ‘பூமி நாள் வாழுமிடம்’ மற்றும் கௌரிலட்சுமி யின் ‘அஜித ஹரே’ கதகளி இசையின் நடன நிகழ்ச்சி ஆகியவை ஒப்பீட்டு ஆய்வில் சேர்க்கப்பட்டன. இதை எதிர்த்து, பாஜக சிண்டிகேட் உறுப்பினர் ஏ.கே. அனுராஜ் தலைமையிலான சேவ் யுனிவர்சிட்டி பிரச்சாரக் குழு, எஸ்யூ சிஐ தலைவர் ஷாஜிர் கான் மற்றும் காங்கி ரஸ் தலைவர் ஆர்.எஸ். சசிகுமார் ஆகி யோர் வேந்தரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையில், துணைவேந்தர் டாக்டர் எம்.எம்.பஷீரை அறிக்கை சமர்ப்பி க்க நியமித்தார். பாடங்களைத் தவிர்க்க வும் என பஷீர் பரிந்துரைத்தார். இருப்பி னும், படிப்பு வாரியமும் கல்விக் குழுவும் (அகாடமிக் கவுன்சில்) கூட்டாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.வெளி யில் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் படிப்பு வாரியம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டா யம் இல்லை என்றும், டாக்டர் எம்.எம். பஷீரின் அறிக்கை இன்னும் பெறப்பட வில்லை என்றும் தலைவர் டாக்டர் எம்.அஜித் தெரிவித்துள்ளார்.