states

img

ஆந்திராவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொலை

தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஆந்திர மாநிலத்தில் பெண்க ளுக்கு எதிரான குற் றங்கள் மிக மோச மான அளவில் அதி கரித்து வருகின்றன. சட்டம்-ஒழுங்கு சீர் குலைவாலும், மாநில அரசின் அலட் சியத்தாலும் உத்த ரப்பிரதேச மாநிலத் தைப் போன்று பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லா மாநிலமாக ஆந்திரா மாறி வருகிறது. இந்நிலையில், திருப்பதி மாவட் டத்தின் வடமலப்பேட்டை ஏ.எம்.புரத்தில் உள்ள யானாடி குடியிருப்புப் பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கே றியுள்ளது. வெள்ளியன்று  குடியிருப்புப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை காணவில்லை. நீண்ட  நேர தேடுதலுக்கு பின்னர் குடியிருப்புப் பகுதிக்கு அருகே புதரில் சடலமாக சிறுமி மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொலைச் செய்யப்பட்ட தாக புத்தூர் அரசு மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டது. போலீசார் விசாரணையில் 3 வயது சிறுமியின் உற வினரான சுஷாந்த் (22) கைது செய்யப் பட்டார். சுஷாந்த் சிறுமியை பாலியல் வன்கொலை செய்ததை ஒப்புக்கொண் டதை அடுத்து அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார்.