states

img

10 ஆண்டுகளில் 6 லட்சம் வீடுகள்; 1 லட்சம் புதிய வீடுகள் கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் உரை

10 ஆண்டுகளில் 6 லட்சம் வீடுகள்; 1 லட்சம் புதிய வீடுகள் கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் உரை

திருவனந்தபுரம் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் 10 ஆண்டுகளில் 6 லட்சம் வீடுகளுக்கு ரூ.19,127.47 கோடியை செலவிட்டுள் ளதாகவும், 2026-27ஆம் ஆண்டில் ஒரு லட்சம் தனிநபர் வீடுகள் மற்றும் 22 வீட்டு வளாகங்கள் கட்டி முடிக்கப்பட உள்ளதாக கேரள சட்ட மன்றத்தில் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரி வித்தார். சட்டமன்றத்தில் 1 மணி 49 நிமிடங்கள் நடந்த ஆளுநர் உரை யில் மேலும் கூறியதாவது, “கேரளத்தில் 64,006 பேர் தீவிர வறு மையிலிருந்து (EPEP) விடுவிக்கப் பட்டுள்ளனர். மீண்டும் வறுமை நிலைக்குத் திரும்புவதைத் தடுக்க இபிஇபி 2.0 (EPEP 2.0) தொடங் கப்பட்டுள்ளது. டிஜி கேரளா (DG  Kerala) திட்டத்தின் மூலம் 21.87 லட்சம் பேர் டிஜிட்டல் கல்விய றிவைப் பெற்றுள்ளனர். ஹரித மித்ரா 2.0 மூலம் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் உரு வாக்கப்பட்டு வருகின்றன. பிரம்ம புரத்தில் 150 டன் சிபிஜி (CBG) ஆலை கட்டி முடிக்கப்பட்டது. குடும்பஸ்ரீ தலைமைத்துவ மேம்பாடு, நிறுவன மேம்பாடு, ஊதிய வேலைவாய்ப்பு வசதி மற்றும் பராமரிப்பு பொருளாதா ரத்தின் விரிவாக்கத்திற்கு முன்னு ரிமை அளிக்கும். உள்ளூர் அர சாங்கத்தில் (உள்ளாட்சி) தொழில் முறை வலுப்படுத்தப்படும். பஞ்சாயத்து நகராட்சி சட்டம் மற்றும் கட்டிட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2025ஆம் ஆண்டு நிறுவன உரிம விதிகள் அடங்கும். சுகாதா ரக் கழிவுகளை முழுமையாக அகற்றுவதை உறுதி செய்வ தற்கான பாதையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உறுதியளித்தல் பாதிக்கப்படும் பகுதியி னருக்கு வலுவான சமூக பாது காப்பு வளையத்தை வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் நல நிதி வாரிய ஓய்வூதிய நிலுவைகள் செலுத்தப்பட்டுள் ளன. நலத்திட்ட ஓய்வூதியம் 62 லட்சம் பேருக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களின் நிதி சுதந்தி ரத்தை அதிகரிக்க மாதத்திற்கு ரூ.1,000 வழங்கும் மகளிர் பாது காப்புத் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இது 31.34 லட்சம் பெண்க ளுக்கு பயனளிக்கும். 30 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கான மெடிசெப் காப்பீட்டுத் திட்டம் ஒரு தேசிய மாதிரி. அதன் இரண்டாம் கட்டம் இந்த நிதியாண்டில் செயல் படுத்தப்படும். கேரள நிதிக் கழ கத்தின் மூலதன அடிப்படை ரூ.1,000 கோடியாக அதிகரிக்கப் படும். இது புதிய நிறுவனங்களுக் கான வட்டியில்லா கடன் வரம்பை ரூ. 15 கோடியாக அதிகரிக்கும். இது மாநிலம் முழுவதும் தொழில் துறை வளர்ச்சி மற்றும் தொழில் முனைவைத் தூண்டும். கேஎஸ்எப்இ-யின் வாடிக்கையா ளர் எண்ணிக்கையை ஒரு கோடி யாக உயர்த்துவதும், மொத்த வர்த்தகத்தை ரூ.1.25 லட்சம் கோடி யாக உயர்த்துவதும் இதன் இலக் காகும். லாட்டரி துறையின் விளம்பர பட்ஜெட், மாற்றுத்திற னாளிகள் விளையாட்டு விழா விற்கான நிதியுதவி போன்ற நலத்திட்டங்களுக்காக நிதி ஒதுக் கப்படும்” என அவர் கேரள அரசின் சாதனைகளை விவரித்தார். மேலும்,உலக தரத்தில் சுகாதா ரப் பாதுகாப்பு பெண் விவசாயிக ளுக்கான சிறப்புத் திட்டம், மீன வர்களின் நலன் காக்கும் திட்டங்கள் குறித்தும் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பேசினார். தனது உரைக்குப் பிறகு, 75 ஆண்டுகளுக்கு முன்பு, அரசிய லமைப்புச் சட்டத்தை உருவாக் கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கேர ளாவிற்கு வந்து சட்டமன்றத்தில் உரையாற்றியதை ஆளுநர் நினைவு கூர்ந்தார். இதன் முக்கி யத்துவம் மகத்தானது என்றும் கொண்டாடப்பட வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார்.