states

img

சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களை துரத்த பாஜக தீவிரம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2023இல் நடை பெற்ற சட்டமன்றத் தேர்த லில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி யை கைப்பற்றியது. முதல்வ ராக அமித் ஷாவின் ஆதரவுடன் விஷ்ணு தேவ் சாய் பொறுப்பேற் றார். விஷ்ணு தேவ் பொறுப்பேற்ற பின் “நக்சலைட்டுகள் வேட்டை” என்ற பெயரில் சத்தீஸ்கர் மாநில மலை மாவட்டங்களில் பழங்குடி யின மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டு வரு கின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நக்சலைட்டுகள் வேட்டை யில் 207 பேர் பாதுகாப்புப் படை யினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 60% பேர் அப்பாவி பழங்குடி மக்கள் என செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆனால் இதனை மாநில பாஜக அரசு மறுத்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 30% அளவில் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். அதாவது ஜார்க் கண்ட் மாநிலத்தைப் போலவே  சத்தீஸ்கரிலும் பழங்குடி மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். பழங்குடி மக்கள் பெரும்பாலும் சுக்மா, பீஜப்பூர், நாராயணபுரம், ராய்கர் உள்ளிட்ட 5க்கும் மேற் பட்ட மலை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.  சத்தீஸ்கரில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் தாதுக்கள் அடங்கிய வளமிக்க பகுதிகள் ஆகும். அதனால் பிரதமர் மோடி தனது நண்பர் அதா னிக்காக சத்தீஸ்கர் மலைப் பகுதியில் நிலக்கரி உள்ளிட்ட தாது  சுரங்கம் அமைக்க திட்டமிட்டு வருவதாக 2022ஆம் ஆண்டு முதலே செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி 2023இல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தவுடன் சத்தீஸ்கரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த விஷ்ணு தேவ்வை முதல்வராக நியமித்து, மாநி லத்தில் நக்சலைட்டுகளை ஒழித்து  அவர்களது செல்வாக்கு இருக்கும் வனப்பகுதி நிலத்தை பறித்து உங்களுக்கு (பழங்குடி) தருவோம் என பாஜக கூறியது.

ஜம்மு-காஷ்மீர்  எல்லையைப் போன்று...

ஆனால் உண்மையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு சத்தீஸ்க ரில் நடப்பதோ வேறு. சுக்மா, பீஜப்பூர், நாராயணபுரம் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் மலை மாவட்டங்களில் ஒவ்வொரு 5 கிமீ சுற்றளவுக்கு இடையே “நக்சல் வேட்டை” பாதுகாப்புப் படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை தாண்டியோ, முகாம்களுக்கு அருகேயோ மக்கள் செல்ல முடியாது. குறிப்பாக மலை வனப்பகுதிக்குச் செல்ல  முடியாது. கிட்டத்தட்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் மலை வனப்பகுதிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய பாதுகாப்புப் படை வசம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான்  எல்லைக்கு அருகே குவிக்கப்பட்டுள்ள பாது காப்புப் படையைப் போலவே சத்தீஸ்கரிலும் குவிக்கப்பட்டுள் ளது. சத்தீஸ்கரில் தற்போது 10 பேருக்கு ஒரு பாதுகாப்புப் படை வீரர் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. முகாம்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மற்றும் மலை வனப்பகுதிக்குச் சென்றவர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ஆனால் உயிரிழந்த அப்பாவி பழங்குடியின மக்களை நக்சல்கள் எனக் கூறி, சத்தீஸ்கர் பாஜக அரசு அறிக்கை விடுகிறது. இவ்வாறு சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே வரு டத்தில் 207 பேரை படுகொலை செய்து, பழங்குடி மக்களை துரத்த பாஜக தீவிரமாக இறங்கி யுள்ளது. 

பாஜகவின் இழிவான சதித்திட்டம் இது தான்...

சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியவுடன் பழங்குடி யினரை முதல்வராக்குகிறது பாஜக. “இது பழங்குடியின மக்க ளின் நலன்” என முதல்வர் பதவி யேற்பு விழாவில் பிரதமர் மோடி பெருமையாகக் கூறுவார். ஆனால் உண்மையில் பாஜக பழங்குடி மக்களின் நலனுக்காக அந்த சமூ கத்தைச் சேர்ந்தவரை முதல்வராக நியமிப்பதில்லை.  பழங்குடி மக்களிடம் இரு க்கும் வளமிக்க நிலம் மற்றும் வனப்பகுதி நிலங்களை பறிப்பதற்காகவே பழங்குடி யினரை முதல்வராக்குகிறது பாஜக. தற்போது சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் பாஜகவின் பழங்குடியின முதல்வர் சதித்திட்டம் அம்பலமாகி யுள்ளது. மணிப்பூரில் பழங்குடி யின மக்களுக்கு எதிராக மெய்டெய்  இனத்தினர் மூலமாக பாஜக அங்கு வன்முறையை தூண்டி வருகிறது.  மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங்  மெய்டெய்  இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் மூலம் பாஜக பழங்குடியினருக்கு எதிரான கட்சி என்பது நிரூப ணமாகியுள்ளது.

மணிப்பூர் : மோடி - அதானியின் வியூகம்

மணிப்பூர் மாநிலத்தில் நிகழும் வன்முறைக்கு குக்கி பழங்குடியின மக்களுக்கும் - மெய்டெய்  இன மக்களுக்கு இடையேயான மோதல் மட்டுமே காரணம் என நாடு முழுவதும் பரவலாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் மணிப்பூரில் நிகழும் வன்முறைக்கு பின்னால் மறைமுகமாக பல்வேறு சூழ்ச்சிகள் புதைந்துள்ளன. வடகிழக்கு மற்றும் பழங்குடிகள் அதிகம் வாழும் மாநிலங்களில் வனப்பகுதி மற்றும் காடுகளை அழித்து அதனை தனது நண்பர் அதானிக்கு மோடி அரசு தாரைவார்த்துள்ளது. ஆனால் மணிப்பூரில் நிலைமை வேறு விதமாக இருப்பதால் அங்கு அதானிக்காக மோடி அரசு செய லாற்ற முடியாமல் தவித்து வருகிறது. காரணம் 90% நிலம் குக்கி உள்ளிட்ட பழங்குடியின மக்களி டம் உள்ளது. மணிப்பூர் மலைப்பகுதியில் நிலம் வாங்க வேண்டும் என்றால், நிலம் வாங்குபவர்கள் பழங்குடி யினராக இருக்க வேண்டும் என்ற பாரம்பரிய பழக்கத்தை விதிகளாக குக்கி பழங்குடியின மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் ஆதிக்கமாக உள்ள குக்கி பழங்குடியினரிடம் இருந்து மலைப்பகுதி நிலங்களை பறிப்பது அவ்வளவு சாதாரண விசயம் அல்ல என்பதால் மோடி அரசு, குக்கி பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை பறிக்க மாநில பாஜக அரசு மூலம் வியூகம் வகுத்தது. அது என்னவென்றால் மணிப்பூர் மாநிலத்தில் ஓரளவு கணிசமாக வாழும் மெய்டெய்  சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கி அதன்மூலம் வளமிக்க மலைப்பகுதியை கைப்பற்றி, அதன்பிறகு அதானிக்கு மலைப்பகுதி நிலங்களை வழங்குவதே மோடி அரசின் சூழ்ச்சி ஆகும்.  மெய்டெய்  மக்களை பழங்குடியினத்தில் சேர்க்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 2023 மே மாதம் மெய்டெய் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பும் பெறப்பட்டது. இதனை எதிர்த்து குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி கிட்டத்தட்ட 19 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து வருகிறது.