states

img

பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை  தொடங்கியுள்ளது.
கடந்த நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக (121, 122) பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. 7.45 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்கள் 62.8% பேரும், பெண்கள் 71.6% பேரும் வாக்களித்தனர்.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று மாலை நிறைவடைந்த பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.