states

img

“சீட்” தராததால் பாஜகவை விட்டு ஓட்டம் பிடித்த ஹரியானா எம்எல்ஏ

90 தொகுதிகளைக் கொண்ட ஹரி யானாவில் அக்டோபர் 5 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிர மாக ஈடுபட்டு வரு கின்றன. 

இந்நிலையில், “சீட்” தராததால் ஹரி யானா பாஜக எம்எல்ஏ கட்சியை விட்டு ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ராடியா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் லட்சு மணன் நாபா. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ராடியா தொகுதியி லேயே போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் பாஜக  மேலிடம் முன்னாள் எம்.பி. சுனிதா தக்கலுக்கு ராடியா தொகுதியில்  போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. இத னால் அதிருப்தி அடைந்த லட்சுமணன் நாபா தனது ஆதரவாளர்களுடன் பாஜக வில் இருந்து விலகியுள்ளார்.