வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறையால் ஆட்சி கவிழ் க்கப்பட்டு இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் வங்கதேசத்தில் இன்னும் அமைதி திரும்பிய பாடில்லை. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், வங்கதேச நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக மேகாலயா மாநிலத்தில் வர்த்தகம் கடு மையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்துடன் 443 கி.மீ., அளவில் சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்ளும் மேகாலயா மாநிலம் சர்வ தேச எல்லை வழியாக உணவு முதல் நிலக்கரி வரை அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. வன்முறையால் வங்க தேச எல்லை மூடப்பட்டதால் 5 நாட்களில் சுமார் ரூ.2.54 கோடி வருவாய் குறைந்துள் ளதாக மேகாலயாவின் தொழில்துறை செயலாளர் சஞ்சய் கோயல் செய்தி யாளர்கள் சந்திப்பில் தகவல் தெரி வித்தார்.