புதுதில்லி மணிப்பூர் மக்களை பாது காப்பதில் பிரதமர் நரேந் திர மோடி, மோசமாக தோல்வியடைந்து விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே குற்றம் சாட்டியுள் ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந் திர மோடியை குற்றம் சாட்டி மல்லி கார்ஜூன கார்கே, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதி வில், ‘‘மணிப்பூர் மாநிலம் வன் முறையில் மூழ்கி 16 மாதங்கள் ஆகின்றன. ஆனால் உங்கள் ‘இரட்டை இயந்திரம்’ அரசாங்கம், அதனைத் தணிக்க எந்த நடவ டிக்கையையும் எடுக்கவில்லை. அமைதி திரும்ப, இயல்புநிலை யை உறுதிப்படுத்த அனைத்து சமூக மக்களிடையே நம்பிக்கை யை ஏற்படுத்துவது முக்கியம். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
திறமையற்ற, வெட்கமற்ற அரசு
மணிப்பூர் முதல்வரை நீங்கள் ஏன் இன்னும் பதவி நீக்கம் செய்யவில்லை? அரசு இயந்தி ரத்தை கிட்டத்தட்ட முடக்கி, அரு வருப்பான அறிக்கைகளை வெளியிட்ட குற்றவாளி அல்லவா அவர்? பதவி நீக்கம் நடந்துவிடா மல் தடுக்கும் நோக்கில், வெட்க மின்றி ராஜினாமா நாடகம் நடத்தியவர் அல்லவா அவர்?
நீங்கள் ஏன் இவ்வளவு இரக்க மற்று இருக்கிறீர்கள்? மணிப்பூ ருக்கு இதுவரை நீங்கள் செல்லா தது குறித்து ஏன் கவலைப்படா மல் இருக்கிறீர்கள்? உங்கள் ஈகோ காரணமாகவே, மணிப்பூரில் அனைத்து சமூக மக்களும் பாதிக்கப்படுகின்றனர். திறமை யற்ற, வெட்கமற்ற உங்கள் அர சால், அடிப்படையான சமாதான நடவடிக்கையை கூட தொடங்க முடியவில்லை!
ஆழ்ந்து தூங்கும் உள்துறை அமைச்சர்
இம்பால் மேற்கு மாவட்டத்தில் இப்போது ட்ரோன் மூலம் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ஆழ்ந்து தூங்குவது போல் தெரிகிறது. உங்கள் சொந்த பாஜக தலை வர்கள் மற்றும் அவர்களின் வீடு கள் கூட தாக்கப்படுகின்றன. நிவாரண முகாம்களின் மோச மான நிலைமைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதால்தான் மாநில ஆளுநர் நீக்கப்பட்டாரா?
குறைந்தது 235 பேர் கொல் லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். 67 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பரிதாபமான நிலையில், நிவாரண முகாம்களில் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.
உள்நாட்டுக் கொந்தளிப் பைத் தவிர, இப்போது மணிப்பூ ரின் எல்லைகளில் தேசிய பாது காப்பு அச்சுறுத்தலும் பெரிய அள வில் உள்ளது. மணிப்பூர் மக்க ளைப் பாதுகாப்பதில் நீங்கள் மோ சமாகத் தவறிவிட்டீர்கள். இந்திய மக்களுக்கு நீங்கள் செய்த துரோ கங்களின் நீண்ட பட்டியலில், மணிப்பூர் கொந்தளிப்பு முக்கிய மானது’’ என விமர்சித்துள்ளார்.