states

img

விஎச்பி பெண் சாமியார் வன்முறைப் பேச்சு பசுக்களைப் பாதுகாக்க ‘வாள்’ ஏந்துவோம்!

பெங்களூரு, டிச.15- பசுமாடுகளைப் பாது காக்க மக்கள் ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் பெண் நிர்வாகி யும், சாமியாருமான சரஸ்வதி கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு சார்பில் கூட் டம் ஒன்று நடைபெற்றுள்ளது.  இதில், கலந்துகொண்டு பேசுகையிலேயே, பசுவைப் பாதுகாக்க மக்கள் ஆயு தங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று  சாமியார் சரஸ்வதி, மக்களை வன் முறைக்குத் தூண்டியுள்ளார். “லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான செல்போன் களை வாங்க மக்களிடம் பணம் இருக்கும்போது, பசுக் களை பாதுகாப்பதற்காக வீட்டில் ஆயுதங்களை வாங்கி வைத்துக்கொள்ள முடியாதா? எனவே, மக்கள் ஆயுதங் களை வாங்கி வைப்பது, தங்கள் தெய்வீகத் தாயை, பசு வதை யிலிருந்து தடுப்பதை உறுதி செய்யும். பசுவை பாதுகாக்க மக்கள் வாள் ஏந்த வேண்டும்” என்று சாமியார் சரஸ்வதி பேசி யுள்ளார்.

;