states

img

வருமான வரித்துறை அறிக்கையில் தகவல் எடியூரப்பா உதவியாளர்களிடம் சிக்கிய ரூ.487 கோடி கறுப்புப் பணம்!

பெங்களூரு, அக்.13- பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வரு மான எடியூரப்பாவின் உதவி யாளர் வீடுகள், அலுவலகங்க ளில் வருமான வரித்துறை அண் மையில் சோதனை நடத்தியது.  இந்நிலையில், அந்தச் சோத னையில் ரூ. 487 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியிருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது மூத்த மகனும் எம்.பி. யுமான ராகவேந்திராவின் அந்த ரங்க உதவியாளராக இருப்பவர் உமேஷ். இதேபோல எடி யூரப்பாவின் இரண்டாவது மகன் விஜயேந்திராவின் நெருங்கிய நண்பர் அரவிந்த். இந்நிலை யில், உமேஷ், அரவிந்த் ஆகி யோருக்குச் சொந்தமான வீடு கள், அலுவலகங்களில் வரு மான வரித்துறையினர் அண்மை யில் சோதனை நடத்தினர். இந்நிலையில், “சோதனை நடத்தப்பட்ட இடங்களில் இருந்து பல முக்கிய ஆவ ணங்கள் கைப்பற்றப்பட்டுள் ளன. மேலும் உமேஷ், அர விந்த் ஆகியோர் நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் ரூ. 382 கோடி + ரூ. 105 கோடி என மொத்தம் ரூ. 387 கோடியை கணக் கில் காட்டவில்லை என ஒப்புக் கொண்டுள்ளன.  இதுதவிர, சோதனை நடந்த பிற இடங்களிலும், கணக்கில் காட்டப்படாத, ரூ. 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், சொத்து ஆவணங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்று வருமான வரித் துறை அறிக்கை வெளியிட்டுள் ளது.

;