states

img

எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்தை தடுக்க முடியாது - ஓலா சிஇஓ ஒப்புதல்

எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்தை தடுக்க முடியாது என ஓலா சிஇஓ ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல இடங்களில் உயிர்ச் சேதமும் ஏற்பட்டது. இது எலெக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருந்தவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் வாகனம் மும்பை அருகே தீ பிடித்து எரிந்தது. கடந்த காலங்களில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே தீ விபத்துக்குள்ளான நிலையில் கார் தீ பிடித்து எரிந்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
இதைத்தொடர்ந்து எங்கள் வாகனத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளன. ஆனால் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என விசாரணை நடத்த  இருக்கிறோம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. 
தற்போது ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் தீ விபத்து என்பது தவிர்க்க முடியாத நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் மட்டும் இல்லை சர்வதேச அளவிலும் பல நாடுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடித்துள்ளது. 
ஐசிஇ வாகனங்களுடன் ஒப்பிடும் போது எலக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிப்பது மிகவும் குறைவாகவே உள்ளது என பவிஷ் அகர்வால் ட்வீட் செய்திருக்கிறார். அவரது இந்த ட்வீட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடிக்கும் என எளிதாக சொல்லி இருப்பதன் மூலம் மக்களின் உயிர்களுக்கு மதிப்பில்லை என்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது. 
 

;