பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலை
புவனேஸ்வரம் பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தின் பாலசோ ரில் உள்ள பக்கீர் மோகன் கல்லூரியில் ஒருங்கிணை ந்த பி.எட். படிப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு, அவரது துறைத் தலைவரான சமீர் குமார் சாஹு என்பவர் தொடர்ந்து பாலி யல் தொல்லை கொடுத்து வந்துள் ளார். பாதிக்கப்பட்ட மாணவி கல்லூ ரியின் உள்விசாரணைக் குழுவி டம் புகார் அளித்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்காத தால், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், சனிக்கிழமை (ஜூலை 12) அன்று சக மாணவர்களுடன் கல்லூரி வாயிலில் பாலியல் துன்பறுத்த லால் பாதிக்கப்பட்ட மாணவி போரா ட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென கல்லூரி முதல்வர் அலு வலகம் நோக்கி ஓடிய மாணவி, தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி 3 நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார். பாலியல் துன்பு றுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில், இந்த விவகா ரத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், சம்பவம் குறித்து நீதி விசாரணை க்கு உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் ஆளும் பாஜக அரசு பக்கீர் மோகன் கல்லூரியில் ஒரு சிலரை கைது செய்து பெயரள வில் நடவடிக்கை எடுத்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்தன. தொடர்ந்து மாணவி தற் கொலை விவகாரத்தில் பாஜக அரசை கண்டித்து மாநிலம் முழு வதும் காங்கிரஸ் தலைமையில் 8 எதிர்க்கட்சிகள் இணைந்து வியா ழக்கிழமை அன்று முழுஅடைப்பு போராட்டத்தை நடத்தினர். ஸ்தம்பித்தது புவனேஸ்வரம், பாலசோர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வ ரம் மற்றும் பாலியல் துன்புறுத்த லால் பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலை செய்துகொண்ட மாவட்டமான பாலசோரில் பிரம் மாண்ட அளவில் முழுஅடைப்பு போராட்டம் மற்றும் பேரணி நடை பெற்றது. கடையடைப்பு, பேரணி, சாலை மற்றும் ரயில் மறியலால் புவ னேஸ்வரம், பாலசோர் மாவட்டங் கள் இயல்பு நிலையை இழக்கும் அளவிற்கு ஸ்தம்பித்தது. அதே போல ஒடிசா மாநி லத்தின் அனைத்து மாவட்டங்களி லும் கல்வி நிறுவனங்கள், வங்கி கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மருத்துவ மனைகள், ஆம்புலன்ஸ்கள், மரு ந்துக் கடைகள் மற்றும் பால் கடை கள் போன்ற அத்தியாவசிய சேவை களுக்கு முழுஅடைப்பு போரா ட்டத்தில் இருந்து விலக்கு அளிக் கப்பட்டது. சில இடங்களில் மாண வர்கள் தெருக்களில் டயர்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.