states

img

‘அயலி’யின் உரையாடலில் இணைவோம்!

மாதவிடாய் காலங்களில் மாணவிகள் பயன்படுத்து வதற்கு ஏதுவாக கல்வி வளாகங்களில் நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங் களை பொருத்தக்கோரி  மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. மாதவிடாயை காரணமாக வைத்து பெண்களை வன்மமும் குரூர புத்தி யோடு ஒடுக்கிய போக்குகளுக்கு எதிராக  கிளர்ந்தெழுந்த வரலாற்றை,  ‘அயலி’ தொடர் பேசியுள்ளது. ‘அயலி’ வெப் சீரீஸ்,  இயக்குனர் முத்துக்குமார் உருவாக்கத்தில் ஜனவரி 26ந் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளி யாக உள்ளது.   காலம் தோறும் மக்கள் மனதில் தங்கி நிலைத்து நின்றிருக்கும் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்ற வற்றை வரலாற்று அறிதலுடன் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என தத்தம் எழுத்துக்கள் வழி அறிஞர் பெருமக்கள் பேசி வருகின்றனர். மக்கள் தங்கள் அனுபவங்களின் வழியே கடந்த கால சடங்குகளோடு ஊடாடி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

இத்தகு உயிர் ததும்பும் பண்பாட்டு நிகழ்வுப் போக்குகளை முன் வைக்கும் கலைப்படைப்பாக ‘அயலி’ தொடர் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் ஒரு சிறு கிராமத்து மக்களின் வாழ்வியலை களமாக வைத்து  ‘அயலி’ தொடர் பேசும் சிந்தனை தமிழ் சமூகம் காது கொடுத்து கேட்க காத்துக் கிடக்கும் சொற்களால் நிரம்பி வழிகிறது. தெய்வத்தோடு மக்கள் உருவாக்கி வளர்த்தெடுக்கும் நம்பிக்கைகள், அதன் இருப்பு, ஆகியவற்றை சூழலுக்கு, தேவைக்கேற்ப முன்னோக்கி நகர்ந்த வரலாற்றுச் சக்கரத்தை திரைமொழியில் காண்கிறது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் மீது உழைக்கும் மக்கள் ஏற்படுத்தும் உடைப்புகள் எவ்வாறு நிகழ்ந்தது, நிகழும் என்பதை  இம்மண்ணின் வாழ்வியலி லிருந்து சத்தும் சாரமும் குறையாமல் அறி முக இயக்குனர் முத்துக்குமார் ‘அயலி’ படைப்பை உருவாக்கி உள்ளார்.

மனிதவளக் குறியீடுகளில் ஒப்பீட்டள வில் தமிழ்நாடு முன்னோக்கி சென்று கொண்டிருப்பதற்கு எத்தகு வலி நிறைந்த போராட்டங்களை தத்தமது சமூகங் களுக்கு ஊடாக உழைக்கும் மக்கள் நடத்தி யுள்ளனர், நடத்தி வருகின்றனர் என்பதை ‘அயலி’ அற்புதமாக எடுத்துரைக்கிறது. வரலாற்றுச் சக்கரத்தை முன்னோக்கி நகர்த்த பெண்கள் எடுக்கும் தொடர் முன்னெடுப்புகள்; அதை தடுக்க, தவிர்க்க  ஆணாதிக்க சமூக அமைப்பு ஏற்படுத்தும்  தடைகள்; இவற்றை ஒவ்வொரு கட்டத்தி லும் எதிர் கொண்டு வரலாற்று ஓட்டத்தை நகர்த்தி வரும்  போர்க்குணமிக்க பண் பாட்டு வரலாறு அட்டகாசமாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ‘அயலி’ கதைக்களத்திற்குப் பொருத்த மான கதாபாத்திரங்கள் ,அவர்களது உயி ரோட்டமான பங்களிப்பு, திரைக்கதை, வசனம், காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் ஒளிப்பதிவு, இசை, பாடல் என அனைத்து அம்சங்களையும் தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து ‘அயலி’யை உருவாக்கி உள்ளார் இயக்குனர் முத்துக்குமார். உயிரும் உணர்வும் கலந்து, உக்கிரம் குறையாமல்  ‘அயலி’ முன்னெடுக்கும் உரையாடலில் இணைந்திடுவோம்.

-ஜி. செல்வா

;