இருப்பு கச்சா எண்ணெய்யை அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவும் விற்பதால் சூளும் அபாயம்
புதுதில்லி, ஏப். 22 - இந்தியாவில் பெட்ரோல் விலை, அடுத்த 6 மாதங்களில் ரூ. 200-ஐ தாண்டும் ஆபத்து உள்ளதாக எண்ணெய் வல்லுநர்கள் அதிர்ச்சி யூட்டி உள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த மார்ச் மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 139 டாலர் வரையில் உயர்ந்து 14 வருட உச்சத்தைப் பதிவு செய்தது. அதன் பின்னர், சுமார் 13 வாரங்களாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தே உள்ளது. கடந்த புதன்கிழமையன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 107 டாலரில் இருந்து 114 டாலர் வரையில் உயர்ந்து மிகப்பெரிய ஏற்றத்தைப் பதிவு செய்தது. இது எண்ணெய் வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதுவே வெள்ளியன்று 1 சதவிகி தம் வரையில் சரிந்து 107.3 டால ராகவும், பொதுவாக நியூயார்க்கில் வர்த்தகம் செய்யப்படும் டபிள்யூ.டி.ஐ (West Texas Intermediate - WTI) கச்சா எண்ணெய் விலை 1.06 சதவிகிதம் சரிந்து 102.7 டால ராகவும் இருந்தது. இந்நிலையில்தான், கச்சா எண்ணெய் சந்தை வல்லுநர்கள் அடுத்த 6 மாத காலத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90 டாலர் முதல் 185 டாலர் வரையில் உயர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இத னால் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை லிட்டர் 200 ரூபாயைத் தாண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா தற்போது ரஷ்யாவில் இருந்து, கச்சா எண்ணெய் இறக்கு மதி செய்து வந்தாலும், சர்வதேச சந்தையிலும் பெரிய ஏற்றம் எதுவும் இல்லை. காரணம், எரி பொருள் விலை தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, தனது அவசரகாலத் தேவைக்காக இருப்பு வைத்திருந்த கச்சா எண் ணெய்யை அமெரிக்கா தற்போது விநியோகம் செய்து வருவதுதான். தான் மட்டுமல்லாமல், இந்தியா போன்ற தனது கூட்டாளி நாடுகளை யும் இந்த வேலையில் அமெரிக்கா இறக்கி விட்டுள்ளது. இந்தியாவும் தனது இருப்பு கச்சா எண்ணெய்யை எடுத்து சந்தையில் விற்க முடி வெடுத்துள்ளது. இதனாலேயே கச்சா எண்ணெய் விலை 102 டால ராக கட்டுக்குள் உள்ளது.
ஆனால் இந்த அவசரகால இருப்பு கச்சா எண்ணெய் நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்காது. இதனால் அமெரிக்காவும் வெளிச் சந்தையில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவேண்டிய நிலை உரு வாகும். அப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு கள் உள்ளது என்கின்றனர் வல்லு நர்கள். லிபியா நாட்டின் பிரதமரை ராஜினாமா செய்யச் சொல்லி, அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருவதால், லிபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதும், விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அத்துடன், ஒபெக் (OPEC) நாடுகள் அதிக வருமானம் பெற வேண்டும் என்பதற்காக உற்பத்தி அளவை அதிகரிக்கக் கூடாது என்பதில் உறுதி யாக உள்ளதால் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என்று கூறும் எண்ணெய் வல்லுநர்கள், அடுத்த 6 மாத காலத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90 டாலர் முதல் 185 டாலர் வரையில் உயர வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் விலை 200 ரூபாயை தாண்ட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.