நாடு முழுவதும் எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முது நிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் கள் வழங்கியது மூலம் பல்வேறு முறை கேடு சம்பவங்கள் அரங்கேறிய நிலை யில், ஜூன் 23 அன்று நடைபெறவிருந்த நீட் முதுநிலைத் தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்ட னம் குவிந்த நிலையில், ஒத்தி வைக்கப் பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11 அன்று நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை வெள்ளியன்று அறி வித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி முது நிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11 அன்று 2 கட்ட மாக நடைபெற உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.