states

img

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் தகவல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் தற்போதைக்கு சாத்தியமில்லை!

புதுதில்லி, அக்.13- “தற்போதைய சூழலை வைத்துப் பார்த்தால், 5 டிரில்லியன் டாலர் பொரு ளாதார இலக்கை எட்டுவது, இந்தியா வுக்கு சாத்தியமில்லை” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி. ரங்க ராஜன் கூறியுள்ளார். ஹைதராபாத் ஐசிஎப்ஏஐ பவுண்டேசனின் (ICFAI Foundation) 11-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சி. ரங்கராஜன் உரையாற்றி யுள்ளார். அப்போது இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொரோனா பொதுமுடக்கம் கார ணமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிக மோசமாக பாதிக்கப்பட் டுள்ளது. 2021-இல் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 7.3 சதவிகிதமாக சரிந் துள்ளது.  பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற் போது பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. முதல் அலை பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்தது. இரண்டாவது அலையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டனர். சில வருடங்களுக்கு முன்பு இந் தியா 5 டிரில்லியன் டாலர் பொருளா தார இலக்கை அடைவது கஷ்டமாக மட்டுமே இருந்தது. ஆனால், கொரோனா பாதிப்புகளால் இது தற்போது சாத்தி யம் அற்றதாகி விட்டது. 2019-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதா ரம் 2.7 டிரில்லியன் டாலராக இருந்தது. 2022 மார்ச்சிலும் நாம் அதே நிலை யில்தான் இருப்போம்.  இந்தியப் பொருளாதாரத்தை 2.7 டிரில்லியன் டாலரில் இருந்து 5 டிரில்லி யன் டாலராக அதிகரிக்க வேண்டும் எனில், ஐந்து வருடங்களுக்கு தொடர்ச்சியாக 9 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை அடைய வேண்டும்.  தற்போது வருவாய் விகிதம் அதி கரித்து வருகிறது. எனவே, பட்ஜெட் நிதி பற்றாக்குறையை 6.8 சதவிகி தத்திற்கும் கீழாக குறைக்க வேண்டிய அவசியமில்லை. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய பல சமூகப் பொருளாதார பிரச்ச னைகளுக்கு தீர்வு காணப்பட வேண் டும். மூன்றாவது அலையின் தாக்கத் தினை எதிர்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி மூலம் பாதுகாப்பை அதிகரிப்ப தோடு, மருத்துவத் துறை உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு சி.ரங்கராஜன் கூறி யுள்ளார்.

;