states

img

பொதுத்துறையை நவீனப்படுத்தினால் நாட்டின் முன்னேற்றம் வேகம் பெறும்

கொச்சி, டிச.11- பொதுத்துறை நிறுவனங்களை முன்னுதார ணமாக்கி, உரிய நேரத்தில் முன்னெடுத்துச் சென்றால், அவற்றின் வளர்ச்சியை உறுதி செய்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்க முடியும் என்று முதல்வர் பினராயி விஜ யன் கூறினார். கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் (CIAL) வணிக ஜெட் முனையத்தை சனியன்று (டிச.10) முதல்வர் திறந்து வைத்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது:  கேரளாவில் தொழில்துறை முன்னேற்றத் திற்கு போக்குவரத்து அமைப்புகளின் நவீன மயமாக்கல் மிகவும் முக்கியமானது. சாலை கள், ரயில் போக்குவரத்து, நீர் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து என அனைத்து துறைகளிலும் இணையான வளர்ச்சியை செயல்படுத்தினால் மட்டுமே நாம் எதிர்பார்க் கும் தொழில் முன்னேற்றம் சாத்தியமாகும். இந்த நான்கு துறைகளிலும் பொருத்தமான திட்டங்களை வகுத்து மாநில அரசு முன்னேறி வருகிறது.

தொடர்ந்து புதிய திட்டங்களை எடுத்து,  குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே திருப்திகர மாக முடிப்பதில் சியாலின் கவனம் குறிப்பிடத்  தக்கது. கோவிட் நெருக்கடி இருந்தபோதிலும்,  சியால் பல புதுமையான உட்கட்டமைப்பு மேம்  பாட்டு திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்  தியது. அவை, கோவிட் உருவாக்கிய பாதிப்பில் இருந்து மீள சியாலுக்கு உதவின. இதன் மூலம், பயணிகளின் எண்ணிக்கையில் 92.66 சத விகித வளர்ச்சியையும், விமான சேவைகளின் எண்ணிக்கையில் 60.06 சதவிகித வளர்ச்சியை யும் சியால் அடைய முடிந்துள்ளது. சர்வதேச  பயணிகளின் எண்ணிக்கையில் கொச்சி விமான நிலையம் நாட்டிலேயே மூன்றாவது பெரிய  விமான நிலையம் என்பது மிகவும் குறிப்பிடத் தக்கது என்றும் அவர் கூறினார்.

பிந்தைய கோவிட் தொற்றுநோய் கட்டத்தில் மாநில அரசின் தலையீட்டின் விளை வாக தொழில்துறை மற்றும் சேவைத் துறை களில் கேரளா முன்னேற முடிந்தது. கேரளா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்  டில் 12.01 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ள தாக ஒன்றிய பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது தேசிய சராசரியை விட அதிகம். கேரளா வில் விருந்தோம்பல் துறை 114.03 சதவிகித மும், விமானப் போக்குவரத்து துறை 74.94 சத விகிதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. சியா லின் இந்த வணிக ஜெட் முனையத் திட்டம், வளர்ந்து வரும் நமது விருந்தோம்பல் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்  டுள்ளது என்று முதலமைச்சர் மேலும் கூறி னார். இத்தகைய மதிப்புமிக்க திட்டத்தை 10 மாதங்களுக்குள் சுருக்கமான பட்ஜெட்டில் முடித்த சியாலின் நிபுணத்துவத்தையும் முதல மைச்சர் பாராட்டினார். தொழில்துறை, சட்ட அமைச்சரும், சியால் இயக்குநருமான பி.ராஜீவ் தலைமை வகித்  தார். இந்நிகழ்வில் சியால் நிர்வாக இயக்கு னர் எஸ் சுஹாஸ் வரவேற்றார், சியால் இயக்கு நர் எம்.ஏ. யூசபலி அறிமுக உரையை நிகழ்த்தி னார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக   வருவாய்த்துறை அமைச்சரும் சியால் இயக்குநருமான கே.ராஜன்.  எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், கேரள தலைமைச் செயலாளர் டாக்டர்.வி.பி.ஜாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.