states

img

கேரளாவை அறிவு பொருளாதாரமாக மாற்றும் செயல் திட்டத்துடன் 2021-2022 பட்ஜெட்....

திருவனந்தபுரம்:
கோவிட் உருவாக்கிய வாய்ப்பைப் பயன்படுத்தி கேரளாவை அறிவுப் பொருளாதாரமாக மாற்றுவதற்கான செயல் திட்டத்துடன் சட்டப்பேரவையில் பினராயி விஜயன் அரசாங்கத்தின் ஆறாவது பட்ஜெட்டை நிதி அமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் வெள்ளியன்று (ஜன.15) சமர்ப்பித்தார்.

உயர்கல்வி, விவசாயம், திறன்மேம்பாடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவற்றிற்கு நிதி நிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பின் தேர்தலில் மக்கள் தீர்ப்பின் வலிமை குறித்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கேரளாவை முன்னோக்கி நகர்த்துவதற்கான கற்பனைக்கு எட்டாத திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளன. சட்டப்பேரவை வரலாற்றில் மிக நீண்ட உரையாக நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கால்வழங்கப்பட்ட பட்ஜெட் 2021-22 கோவிட்டுக்கு பிந்தைய கேரளத்தின் நலன்களையும், வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.

பள்ளி குழந்தைகளின் திறமையையும் கற்பனையையும் கேரளாவின் எதிர்கால கவிதையாகவும் சித்திரமாகவும் இணைத்த தனது 12 ஆவது பட்ஜெட் விளக்கக் காட்சியில், ஐசக் மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தாமதமும் கடனின் விதிமுறைகளும் அரசாங்கத்தை மோசமாக பாதித்தன என்றார் தாமஸ் ஐசக்.  பதினைந்தாவது நிதி ஆணையத்தின் அணுகுமுறை ஜனநாயகத்தின் வாள் போன்ற மாநிலத்தின் நிதிகளில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்றார். கோவிட் தொற்றுநோய் மற்றும் மத்திய அரசின் புறக்கணிப்புக்கு மத்தியில், பட்ஜெட் மாநில நலன்  மற்றும் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும்சமூக சமத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த பட்ஜெட் தனித்துவமானது, இது கேரளாவின் தற்போதைய தேவைகளையும் எதிர்காலத்தையும் பார்க்கிறது. புறக்கணிக்கப்ப ட்டவர்களைக் கவனிக்கிறது.  பரிந்துரைகள் அனைத்து துறைகளுக்கும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை. ரூ.7.68 கோடி பட்ஜெட் பற்றாக்குறையுடன், புதிய வரி திட்டங்கள்எதுவும் இல்லை. ரூ.191 கோடிக்கணக்கான வரிச்சலுகைகள் உள்ளன.  பெருவெள்ள செஸ் ஜூலைமாதத்தில் நிறுத்தப்படும். வர்த்தகர்களுக்கான ஒரு முறை வரித் தீர்வு திட்டம் தொடரும்.

மத்திய அரசின் புறக்கணிப்பும் தடுமாறாத முன்னேற்றமும்
மத்திய அரசின் புறக்கணிப்பு, கோவிட் தொற்றுநோய்களுக்கு மத்தியில், கேரள அரசின் பட்ஜெட் நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது, இது நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது. பொருளாதார ரீதியான மூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கும் திட்டத்துடன், கேரளாவின் பெருமைமிக்க வளர்ச்சித் திட்டங்களைச் சுற்றி மத்திய புலனாய்வு அமைப்புகள் வட்டமிட்டன. இறுதியாக கிப்பியை அழிக்க முயன்றனர். இவற்றைப் பார்த்து மக்கள் அரசு பதறவில்லை. பட்ஜெட் கிப்பிக்கு மேலும் வலுவூட்டும். அரசாங்கம் அனைத்து நெருக்கடிகளையும்  செயலூக்கத்துடன் அரசு எதிர்கொண்டபோது, கேரள மக்கள் வென்றனர். மத்திய அரசும் கேரளத்தின்  எதிர்க்கட்சியும் தோல்வி கண்டன.

கேரளம் பகிர்ந்து கொள்வது நம்பிக்கையின் அடையாளத்தை என்று தனது பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக்  கூறினார். கிப்பி நிதியுதவியைப் பயன்படுத்தி செயல்படுத்தியது ரூ.60,000 கோடி மதிப்பிலான  தூண்டுதலளிக்கும் தொகுப்பு செயல்படுத்தப்படுகிறது. கிப்பிக்குஎதிரான திட்டமிட்ட நகர்வுகள் சிலமையங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, 1999 முதல் நடைமுறையில் இருந்துவருவதும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதுமான  சட்டத்தை , 2019–20க்கான நிதிக் கணக்கு அறிக்கையில், அரசமைப்பு சாசனத்துக்கு விரோதமானது என்று விவரித்தது. வரைவு அறிக்கையில் அத்தகைய குறிப்புகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. விளக்கத்திற்காக மாநில அரசுக்கு வாய்ப்பு மறுப்பது நாட்டில் தற்போதுள்ள தணிக்கை வழிகாட்டுதல்களுக்கு முரணானது.திருவிதாங்கூர் இந்தியஒன்றியத்துடன் இணைந்ததிலிருந்து நமது பாரம்பரியமாக இருந்து வரும் கருவூல சேமிப்பு வங்கிக்கு எதிராக அதே கோணங்களில் இருந்து நகர்வுகள் தொடங்கின. இவற்றையெல்லாம் கேரளம் ஒன்றுபட்டு நின்று எதிர்கொள்ள வேண்டும் என்று நிதியமைச்சர் கூறினார்.
 

;