states

img

பாஜக ஆளும் குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 21 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பாஜக ஆளும் குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அங்கு சட்டவிரோத மது விற்பனை, சாராய விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.