வெள்ளி, பிப்ரவரி 26, 2021

states

img

ஜார்கண்ட்: சுரங்கத்தின் மேல் கூரை இடிந்து விபத்து: 4 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கத்தின் மேல் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
ஜார்கண்டின் கோபடெர்மா மாவட்டத்தில் அடர் வனப்பகுதியில் சட்ட விரோதமாக மைக்கா சுரங்கம் அடைக்கப்பட்டிருந்தது. வியாழனன்று மாலை சட்ட விரோதமாக சுரங்கத்தின் மேற்கூரை செதுக்கப்பட்டபோது மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 6 பேர்  சிக்கி கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 2 பேரை உள்ளூர் வாசிகள் மீட்டனர். இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத சுரங்கத்தை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாம் மியானை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

;