science

img

2021-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2021-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு  வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்மிலும் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று  (அக்.5 திங்கட்கிழமை)முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன, முதல் நாளான நேற்று மருத்துவ துறைக்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து, இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஸ்க்யூரா மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

;