science

img

ஒருவாரத்திற்கு விண்வெளி வாரம்!

சென்னை,அக்.4- விஞ்ஞான் பிரசார் அறிவியல் பலகை தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் சார்பில் விண்வெளி வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோ பர் 4ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி  வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விண்வெளியில் பெண்கள் என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. தினசரி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு  தலைப்புகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உரையாற்றுகின்றனர்.  முதல் நாளான அக்டோபர் 4ஆம் தேதி, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் முனைவர். மயில்சாமி அண்ணாதுரை “சந்திராயன் சரித்திர சாதனை எதிர்கால மும்” என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார்.விஞ்ஞான் பிரசார், இயக்குனர் முனைவர். நகுல் பராசர் துவக்கி வைத்தார். முனைவர் த. வி. வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி விஞ்ஞான் பிரசார் மற்றும் முனைவர். எஸ். சௌந்தரராஜ பெருமாள், செயல் இயக்குனர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், முனைவர். பால் தயாபரன், முதல்வர் பிஷப் `ஹீபர் கல்லூரி, திருச்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திருச்சி அஸ்ட்ரோ கிளப் மற்றும் பல்வேறு கல்லூரிகள், கல்வி நிறுவ னங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இதுகுறித்து அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் பா. ஸ்ரீகுமார் கூறியதாவது:- ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார், அதன் தமிழ் பிரிவானஅறிவியல் பலகை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் இணைந்து ஆன்லைன் வழியாக விண்வெளி துறை  குறித்த பல்வேறு தலைப்புகளில் விஞ்ஞானிகள் தமிழில் உரையாற்ற ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு ஜூம் செயலி வழியாகவும், அறிவியல் பலகையின் யூ டியூப் சேனலின் நேரலையிலும் காணலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் இல்லை.  ஜூம் செயலி வழியே இணைவதற்கான அடையாள எண் கடவுச்சொல் ஆகி யவை இங்கு தரப்பட்டுள்ளன இவற்றை பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியில் இணையலாம். மேலும் ariviyal palagai என்ற யூடியூப் சேனலில் நேரலையில் காண லாம். இந்த உரை நிகழ்வில்  மாணவர்கள் ஆசிரியர்கள்,

பொதுமக்கள், பங்கு பெற்று பயனடையுமாறு அறிவியல் பலகை வேண்டுகிறது. அக். 5 மாலை 6 மணிக்கு ராஜசேகர், இஸ்ரோ, திருவனந்தபுரம் தலைப்பு: விண்வெளித்துறையில் பெண்கள், அக்.6 மாலை 6 மணி முனைவர்.இளங்கோவன் (ஓய்வு) விஞ்ஞானி, இஸ்ரோ, சென்னை தலைப்பு: காகரின் முதல் ககன்யான் வரை, அக். 7 மாலை 6 மணி முனைவர் வே. சசிக்குமார் விஞ்ஞானி இஸ்ரோ, திருவனந்தபுரம், தலைப்பு - உலக ஏவு வாகனங்கள். அக். 8 மாலை 6 மணி முனைவர். த.வி.வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி, விஞ்ஞான் பிரச்சார், புது தில்லி தலைப்பு: இரண்டாவது தேனிலவு  ஏன்? எப்படி?, அக். 9 மாலை 6 மணி பால் முருகன், விஞ்ஞானி இஸ்ரோ, திருவனந்தபுரம் தலைப்பு : ராக்கெட் மீட்பு மறுபயன்பாடு அக். 10 மாலை 6 மணி பாலாபாரதி, தலைவர், திருச்சி ஆஸ்ட்ரோ கிளப், திருச்சி தலைப்பு: இரவு வான்நோக்குதல். இவ்வாறு அவர் கூறினார்.

;