science

img

காச நோய் ஒழிப்பு பணிக்காக எம்.எஸ்.சுவாமிநாதனுக்குப் பாராட்டு....

சென்னை:
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், காச நோய் ஒழிப்புக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பாராட்டப்பட்டார்.

சென்னையில், வெள்ளியன்று, ரீச் எனப்படும் கிராமப்புற கல்வி மற்றும் குழந்தைகள் நலம் சொசைட்டி (REACH) சார்பாக இந்தப் பாராட்டு வழங்கப்பட்டது.ரீச் என்னும் அமைப்பு, 1998 இல் நிறுவப்பட்டு, கடந்த இருபதாண்டு காலமாக காசநோய் ஒழிப்புக்காக செயல்பட்டு வருகிறது. இதன்நிறுவனத் தலைவராக இருந்தவர் எம்.எஸ். சுவாமிநாதன். இவருடைய பணிகளைப் பாராட்டும் விதத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிறுவனம் நிறுவப்பட்ட சமயத்தில் காச நோயை ஒழிப்பதற்காக, மூன்று முனைகளில் இதன் நடவடிக்கைகள் அமைந்திட வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கூறுவார் என்று இந்நிகழ்வின்போது உரையாற்றிய அவருடைய மகளும், உலக சுகாதார அமைப்பின் கீழ் தலைமை விஞ்ஞானியாக இருந்துவரும் சௌம்யா சுவாமிநாதன் குறிப்பிட்டார்.காச நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்திட வேண்டும், பின்னர் பிரச்சனையின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும், பின்னர் அதனை ஒழித்துக்கட்டுவதற்காக மக்களை அணிதிரட்ட வேண்டும். இவ்வாறு மூன்று முனைகளில் செயல்பட வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் சுட்டிக்காட்டி வந்தார் என்று சௌம்யா சுவாமிநாதன் மேலும் கூறினார்.இந்நிகழ்வின்போது உரையாற்றிய தி இந்து குழுமத்தில் இயக்குநர் என்.ராம்,“பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதுபசி-பஞ்சம்-பட்டினி போன்ற பிரச்சனையாக இருந்தாலும் சரி அல்லது காசநோய் போன்றநோயாக இருந்தாலும் சரி, அவருடைய அணுகுமுறை என்பது இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கும். முதலாவது, இவற்றை ஒழிக்க தொலைநோக்குப் பார்வையுடன் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இரண்டாவது, அதனை செயல்படுத்திட நடவடிக்கைகள் எடுத்திடவேண்டும் என்பதாகும்,” என்றார்.

இந்நிகழ்வின்போது பேசிய சௌம்யா சுவாமிநாதன், காச நோயை ஒழிக்க மருத்துவரீதியான நடவடிக்கைகள் மட்டும் போதாது, ஊட்டச்சத்து, வாழ்வாதாரங்கள் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.“நாம் காச நோயை ஒழித்துக்கட்ட ஏராளமானவற்றைச் செய்ய வேண்டிய நிலையில்இருக்கிறோம். கோவிட்-19இன் காரணமாகமேலும் பின்னடைவினை அடைந்திருக்கிறோம். இதிலிருந்து நாம் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டு அவற்றைப் பிரயோகிக்க வேண்டியநிலையில் இருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார். (ந.நி.)

;