science

img

செவ்வாய்க் கிரகத்தில் சேகரிக்கப்படும் பாறைகள் , பூமிக்குக் கொண்டு வருவது சாத்தியமா ? 

செவ்வாய்க் கிரகத்தில் தரையிறக்கப்பட நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் , இரண்டாவது முயற்சியில் பாறை மாதிரிகளைச் சேகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ராஷெட்  என்றழைக்கப்படும் ஒரு தடிமனான திட்டில், ரோவர் இயந்திரம் நேர்த்தியாக ஒரு துளையிட்டு மாதிரிகளைச் சேகரித்து இருக்கிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வெளியான படத்தில், செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பாறை மாதிரிகள் பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் மாதமும்  பாறை மாதிரிகளைச் சேகரிக்க நாசா  முயன்றது , ஆனால் பாறைகள் நொறுங்கிவிட்டன. தற்போது சேகரிக்கப்பட்டுள்ள பாறை மாதிரிகள் வெற்றிகரமாகப்  பூமிக்குக் கொண்டு வந்தால்  வேற்று கிரகத்தில் முதல்முறையாகச் சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பாறை மாதிரிகளைச் சேகரிக்க பெர்சவரன்ஸ் ரோவர் என்ற இயந்திரத்தை நாசா பயன்படுத்தியிருக்கிறது . இந்த பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை, இன்ஜெனியூட்டி என்கிற சிறிய ட்ரோன் கண்காணித்து வருகிறது.சோதனை முயற்சியாகச் செவ்வாய்க் கிரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த ட்ரோன், தற்போது ரோவர் பயணிக்கும் செவ்வாய்க் கிரகத்தின் நில அமைப்புகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

;