science

img

அண்டார்டிக்காவில் ஓசோன் துளை வழக்கத்தைவிடப் பெரிதாகி உள்ளது - ஆராய்ச்சியாளர்கள் தகவல் 

பூமியின் தெற்கு அரைக்கோளில் ஏற்பட்டுள்ள ஓசோன் துளை வழக்கத்தை விட பெரியதாகக் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .மேலும் , அந்த ஓசோன் துளை , ஏற்கனவே அண்டார்டிக்கா கண்டத்தின் அளவை விடப் பெரிதாக இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் .

வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் , சூரியனிலிருந்து பூமிக்கு வரும் புற ஊதா கதிரை உறிஞ்சுகிறது . ஓசோன் இல்லையெனில் , இந்த அதிக ஆற்றல் கதிர்வீச்சு பூமியில் வாழும் உயிரணுக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் . ஆனால் , இந்த ஓசோனில் , பூமியில் உபயோகிக்கப்படும் சில ரசாயனங்கள் , மற்றும் காற்று மாசுவால் துளை உருவாகியுள்ளது . இதனால் , ஹாலோகார்பன் எனப்படும் ரசாயனத்தை உபயோகிக்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது . இருந்தும் , வருடா வருடம் ஓசோன் துளை பெரிதாகிக்கொண்டே இருக்கிறது . 

இது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்னிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை , பூமியின் தெற்கு அரைக்கோளில் தென்படும் ஓசோன் துளையானது , ஒவ்வொரு வருடம் வசந்த காலத்திலும் , முன்பு இருந்ததைவிடச் சற்று பெரிதாகும் என்ற தெரிவித்தது . ஆனால் , இந்தமுறை வழக்கத்தை விடவும் சற்று பெரிதாகவே துளையாகியுள்ளதாக கோப்பர்னிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவையின் தலைமை ஆராய்ச்சியாளர் வின்சென்ட் ஹென்றி-பியூச் தெரிவித்துள்ளார் . 

மேலும், இந்நிலை தொடர்ந்தால் , 2060ஆம் ஆண்டுக்குள் பூமியைக் கதிர்வீச்சிலிருந்து காக்கும் ஓசோன் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று சில வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் .

;