polling-station

தயார் நிலையில் விவசாயிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இத்தேர்த லில் வலுப்பெற்றுள்ளது. வாக்குக் கேட்டு வருவோரிடம் கட்சி, சின்னம் எல்லா வற்றையும் தள்ளி வைத்துவிட்டு காவிரி டெல்டா விவசாயிகள் முன்வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான்... மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப் படுமா, அதற்கு உத்தரவாதம் என்ன?இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கமத்திய மோடி அரசு தீர்மானித்து ஓஎன்ஜிசி மற்றும் தனியார் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் சிலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இதில் காவிரி டெல்டா வைச் சேர்ந்த சிதம்பரம் பகுதியில் ஓஎன்ஜிசிக்கும் நாகை மாவட்டம் கடல் படுகையில் வேதாந்தா நிறு வனத்திற்கும் இரண்டு இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் துவங்கி கரியாப்பட்டினம் வரை யிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு துவங்கி வாய்மேடு, கரியாப்பட்டினம், புஷ்பவனம், தலைஞாயிறு, திருக்குவளை, கச்சம் ஆகிய பகுதிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்கிற அறிவிப்பை தொடர்ந்து விவசாயிகளும் பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.


இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உடனேயே திமுக,சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கூட்டணிக்கட்சியினர் திருவாரூர் ரயில்வே நிலை யத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து திருக்காரவாசலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் சைக்கிள் பேரணி நடத்தினர். திட்டம் கைவிடப்படவில்லை என்றால்டெல்டாவில் உள்ள விவசாயிகள் அனைவரையும் திரட்டி மாட்டுவண்டி ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அது ஒத்திவைக்கப் பட்டது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள் முழுமையும் உள்ளடக்கி சுமார் 474.19 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல் படுத்த மத்தியமோடி அரசாங்கம் விடாப்பிடியாக உள்ளது. எனவே, டெல்டா மக்களின் கோபத்திற்கும் உரிய பதிலை சொல்வதற்குமத்தியில் ஆளும் மோடியோ மாநி லத்தில் ஆளும் எடப்பாடியோ தயாராக இல்லை என்பதை டெல்டா மக்கள் இப்போதுபுரிந்து கொண்டுள்ளனர். விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் லட்சக்கணக் கானோரின் வாக்கு வங்கியை குறி வைத்து, தேர்தல் முடிந்தவுடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம், திட்டத்தை ரத்து செய்ய மத்திய மோடி அரசை வலியுறுத்துவோம் என்று எடப்பாடி பேசி வருவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. இரண்டு அரசையும் தோற்கடிப்பதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் தயாராகி விட்டனர்.