politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா:- நாட்டின் பாதுகாப்புக்கும், மக்கள் நலனுக்கும் முன்னுரிமை.
ச.சா- சிறைல இருந்த அனுபவம் வேற இருக்கே இவருக்கு..!!?
***************
பொருளாதார நிபுணர்கள்- பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மத்திய அரசுக்கு சவால்.
ச.சா- மக்கள்தான கஷ்டப்படப் போறாங்க..!!
***************
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி :- தமிழகத்தில் வீசியது பாஜக எதிர்ப்பு அலை அல்ல, அதிமுக எதிர்ப்பு அலைதான்.
ச.சா - இனிமே அடுத்த தேர்தலுக்குதான் அதிமுக தேவைப்படும்..!!
***************
தமிழக அமைச்சர் செங்கோட்டையன்:- இருமொழிக் கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு.
ச.சா - மத்திய அரசோட வரைவுக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பீங்களா..??