politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டால் மட்டும் தொழிற்சாலைகள் வந்துவிடாது.
ச.சா - என்ன தடைனு பாத்து அத விலக்காம இப்புடி சொல்றதுனால என்ன ஆகப்போகுது..!!??
*****
செய்தி :- பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கம்.
ச.சா - தொடர்ந்து வலதுசாரி ஆட்சியாளர்கள் மக்கள் ஜனநாயகத்த முடக்குறாங்களே..??
*****
செய்தி :- ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சியைக் கண்காணிக்க அமைச்சர்கள் குழு.
ச.சா - பொருளாதாரம் அதல பாதாளத்துல இருக்குதே... அத விட்டுட்டு அரசியல் விளையாடிட்டு இருக்காங்களே..??
*****
மத்திய அமைச்சர் ஜவடேகர் :- காஷ்மீர் பற்றித் தவறான கருத்தைக் கூறி அவமானப்படுத்திவிட்டார் ராகுல்காந்தி.
ச.சா - காஷ்மீர் இந்தியாவோட ஒருங்கிணைந்த பகுதினு சொல்லிருக்காரே.. அது தவறான கருத்தா..??

;