politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

ஆய்வறிக்கை :- வெளிநாடுகளில் இந்தியர்களின் ரூ.34 லட்சம் கோடி.
ச.சா - இத கொண்டு வர்றதா சொல்லி நம்மள மறுபடி நடுத்தெருவுல நிக்க வெச்சுருவாங்களோ..??
_ _ _

மத்திய தேர்தல் ஆணையம்:- ஆணையர் லவாசாவின் ஆட்சேபக் குறிப்புகளை வெளியிட்டால் தனிநபர் உயிருக்கு ஆபத்து.
ச.சா - உயர்பதவியில் இருக்கும் ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பது யார்..??
_ _ _

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி :- சாலைகளை அமைக்கும் திட்டங்களுக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும்.
ச.சா - இருக்குற நிதியயும் பறிச்சுட்டு இது வேறயா..??
_ _ _

செய்தி :- ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆச்சார்யா பதவி விலகல்.
ச.சா - குறைந்த பட்ச மனச்சாட்சி இருக்குறவங்களால இந்த மத்திய அரசோட தாக்குப்பிடிக்க முடியாதுல்ல..!!

;