politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும்.
ச.சா - “விரைவில்”னா ஒரு பத்து வருஷம்னு எடுத்துக்கலாமா..??
 

தமிழக பாஜக :- தேசிய புலனாய்வு நிறுவன மசோதாவை எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் பொதுமக்கள் கண்டிக்க வேண்டும்.
ச.சா - பொது மக்களே விமர்சிச்சா என்ன பண்றது..??
 

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ :- பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவின் அரசியல் திட்டங்களைத்தான் முன்னெடுத்தோம்.
ச.சா - பாஜக திட்டம்லாம் மோசம்னு சொல்றாரோ..??
 

மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ் :- மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பேன்.
ச.சா - அதுக்கு முதல் எதிரியே உங்க கூட்டாளி சிவசேனாதானே..??

;