politics

img

ஆக.13 அன்று சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் 

சென்னை : ஆக.13 ம் தேதி அன்று சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகச் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 13- ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன்படி ஆக.9 ம் தேதி தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இதுவே முதல் முறையாகத் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

;