politics

img

இனி உன் வாக்கைச் செலுத்திவிடு


(என்னதான் நடக்கும் நடக்கட்டுமே 

திரையிசை மெட்டு) 


என்னதான் பணமாய் கொடுக்கட்டுமே

ஆணையம் அமைதி காக்கட்டுமே

பொன்னான வாக்குகள் கிடைக்கட்டுமே

கண்ணான மாற்றம் மலரட்டுமே...(என்னதான்)


பின்னாலே தெரிவது அலங்கோலம் 

முன்னாலே தெரிவது பொற்காலம்

நடுவினிலே நீ ஓட்டுப் போடு

கொடிய ஆட்சிகள் மாற்றிக் காட்டு..(என்னதான்)


நாட்டுப் பற்றுக்கு வரையறையை

நாட்டை ஆண்டவர் சொல்லுவதா

நாட்டின் விடுதலைப் போரினிலே

ஓடி ஒளிந்தவர் தெரியாதா...(என்னதான்)


மனதினில் நினைவு படுத்திவிடு 

மனிதர்கள் விரோத ஆட்சிவடு

கணிதம் அவற்றை நீக்கிவிடு

இனிஉன் வாக்கைச் செலுத்திவிடு...(என்னதான்)

 

ஏழை, எளிய மக்கள் பணம்

சுரண்டிக் கொழுத்த வர்க்க குணம்

மோடி அரசின் தீய மனம்

ஓடி கார்ப்பரேட் சேவைதினம்...(என்னதான்)



பட்டு வேட்டி கட்டுவதாய்

பொய் விதை விதைத்த அரசுகளோ

கட்டிய கோவணம் உருவியது

கட்டியம் கூறும் ஆட்சி மாற்றம்...(என்னதான்) 


இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் 

எந்த மதமாய் இருந்தாலும் 

சொந்த பந்தமாய் வாழ்ந்த நிலை 

இந்திய மண்ணில் மீட்டிடுவோம்...(என்னதான்)

- பெரணமல்லூர் சேகரன்

;