politics

img

நல்ல ஆட்சி -கவிதை--விரலுக்கு கருமை

விரலுக்கு கருமை

விடியலுக்காக என்றறியாமல்

வாழ்வுக்கும் கருமை

பூசிக்கொள்ள விலைபெறாதே!


நுனி விரல் கொண்டெழுது

நாட்டின் வரலாற்றை - உன்

ஓட்டின் மூலம்


ஓட்டு உன்னாலே

எழுதப்படும் உன் விதி

உண்மையாய் இல்லையேல்

என்னாகும் உன் கதி


குரல் கொண்டு

பேசியது போதும்- இனி

விரல் கொண்டு

பேசி விதியினை மாற்று

உன் வாக்கு உன் வாழ்க்கை

இதை உள்ளத்தில் ஏற்று


உருவாக்கு –புது

வரலாற்றை...

பொய்யுரை

மயக்கம் தவிர்- உன்

ஒரு விரலால்

பாரத கூன் நிமிர்


உளுதுண்டு வாழவும்

நம்மை உண்மைகள் ஆளவும் - நல்ல

ஆட்சியை எழுது

மனசாட்சியால் எழுது

;