politics

img

கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிப்பதில் கேரள மாநிலம் முதலிடம்

இந்தியாவில் கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்த மாநிலங்களில் கேரள முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் கேரள மாநிலம் பல துறைகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த கால புள்ளிவிவரங்களின்படி அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக் குறியீட்டில், நாட்டிலேயே 75 புள்ளிகளுடன் கேரள மாநிலம் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தது மேலும், கல்வியறிவிலும் தொடர்ந்து கேரள மாநிலமே முதலிடம் வகித்து வருகிறது.

இந்நிலையில், 2021 கல்வி நிலை அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்த மாநிலங்களில் கேரளா மாநிலம் 91% மாணவர்களுக்கு கல்வி வழங்கி முதலிடத்திலும், மகாராஷ்டிரா 45.5%, கர்நாடகா 34%, தமிழ்நாடு 27.4 என்ற சதவிகித அடிப்படையில் அடுத்தடுத்த நிலையில் உள்ளன. 13.9 சதவிகிதம் என்ற அடிப்படையில் பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலமும், 13.3 சதவிகிதம் என்ற அடிப்படையில் திரிணாமூல் ஆளும் மேற்குவங்காள மாநிலமும் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிப்பதில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன.

இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில், கொரோனா  தொற்றுநோய் காலத்தில் கிராமப்புறங்களில் உள்ள 91% பள்ளி மாணவர்களுக்கு கேரள மாநிலம் ஆன்லைன் கல்வியை வழங்கியுள்ளது. இந்த பெருமைக்குரிய சாதனையை சாத்தியப்படுத்த ஒட்டுமொத்த கேரள மக்களும் அரசுக்கு ஆதரவாக நின்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

 

;