politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்...

பெண்களைக் கேள்வி கேட்க பாஜகவுக்கு என்ன அதிகாரம்?

“பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவது பற்றிப் பேசுகிறார் கள். பாஜக அமைச்சர் ஒருவர், பெண்கள் ஒரு மாவட்டத்தை விட்டுவெளியே செல்ல வேண்டும் என்றால்அனுமதி வாங்க வேண்டும், போலீசில் பதிவு செய்ய வேண்டும் என்று பேசுகிறார். இப்படியெல்லாம் கூறுவதற்கு பாஜகவினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

                                             **************

ஜர்கிஹோலி மீது எடியூரப்பா நம்பிக்கை!

ஆபாச வீடியோவில் சிக்கிய, கர்நாடகமுன்னாள் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ்ஜர்கிஹோலி மீது, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன் றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், “ஜர்கிஹோலிமீது தேவையின்றி புகார் கூறப்பட்டுள்ளதாவும், அவர் நிரபராதியாக வெளியே வருவார்” என்றும் கர்நாடக பாஜக முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித் துள்ளார்.

                                             **************

உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைப்பு!

‘இந்திய அரசியலமைப்புச் சட்டத் தந்தை’ டாக்டர் அம்பேத்கரின் சிலையை, மர்ம நபர் கள் உடைத்து சேதப் படுத்தியுள்ளனர். உத் தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்திலுள்ள குந்தா எனும் கிராமத்தில் இந்தசம்பவம் நடந்துள்ளது. தலித் மக்களின் போராட்டத்தை அடுத்து, புதிய சிலை நிறுவுவதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. பீம்புரா காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட் டுள்ளது.

                                             **************

ரூ.100 கோடி லஞ்சப் புகார்:நீதிபதி நியமனம்

ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்துத் தருமாறு மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில்தேஷ்முக் (காங்கிரஸ்) கூறியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங் குற்றம்சாட்டியிருந்தார். பாஜக தூண்டுதல் பேரிலேயே இந்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு இருப்பதாக ஆளும் மகாவிகாஸ்அகாதி கூறினாலும், மறுபுறத்தில் இதுபற்றி விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கைலாஷ் உத்தம்சந்த் சண்டிவால் தலைமையிலான ஆணையத்தை அமைத்துள்ளது.

                                             **************

வெளியூர் போலீஸ் போனதும் துரோகிகளுக்கு அடி உறுதி!

“மத்தியப்பிர தேசம் மற்றும் பாஜக ஆளும் சில மாநிலங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு நந்திகிராமில் குவிக் கப்பட்டுள்ளனர். இதனால் கிராமங்களில் உள்ள மக்களை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். முடிவை தங்களுக்குச் சாதகமாக மாற்ற பாஜக முயல்கிறது. வெளிமாநில போலீஸார் இங்கு தேர்தல் முடியும்வரைதான் இருப்பார்கள். அதன் பிறகு துரோகிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று மேற்குவங்கமுதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

;