politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

அனுமதி வழங்குவதில் மோடி அரசு தாமதம்!

ஆக்சிஜன் டேங்க், ஜெனரேட்டர்கள், மருந்துகள் வாங்க மகாராஷ்டிர அரசு உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது. ஆனால், பல்வேறு அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க,மத்திய மருந்துத் துறை வேகமாக ஒப்புதல் வழங்குவது இல்லை. தடையில்லா சான்று கிடைக்கும் வழிமுறைக்கு அதிக நேரம் எடுக்கிறது என்று மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே குற்றம் சாட்டியுள்ளார். 

                                  **************

அசாமிற்கு தப்பியோடும் மேற்குவங்க பாஜக-வினர்?

மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்க்கட்சியினர் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை 11 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், திரிணாமுல் தாக்குதலுக்கு பயந்து, மேற்குவங்க பாஜக-வினர் அசாம் மாநிலத்திற்கு தப்பிவருவதாக அம்மாநில பாஜக அமைச்சர்ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

                                  **************

முதல்வர்கள் கூட்டத்தில்  மோடி மட்டுமே பேசுகிறார்

‘மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசுவது போல், பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். கொரோனா விவகாரத்தில், மாநிலங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து, பிரதமர் மோடி பேசியிருந்தால், மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால், முதலமைச்சர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை, அவர் காது கொடுத்து கேட்பதில்லை. ஆலோசனையின் போதுபிரதமர் மட்டுமே பேசுகிறார். முதல்வர் களைப் பேச விடுவதில்லை’ என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விமர்சித்துள்ளார்.

                                  **************

18+ வயதினரில் இதுவரை 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி

18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மே 1 முதல் கொரோனாதடுப்பூசி செலுத்தஅனுமதி வழங்கப்பட் டது. இதன்படி தமிழ்நாடு(6,415), சத்தீஸ்கர் (1,026), தில்லி (1,29,096), குஜராத் (1,96,860), ஜம்மு - காஷ்மீர் (16,387), ஹரியானா (1,23,484), கர்நாடகா(5,328), மகாராஷ்டிரா (1,53,966), ஒடிசா (21,031), பஞ்சாப் (1,535), ராஜஸ்தான் (1,80,242), உத்தரப் பிரதேசம் (68,893) ஆகிய 12 மாநிலங்களில் தற்போதுவரை 9 லட்சத்து 4 ஆயிரத்து 263 பேருக்குதடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

                                  **************

முக கவசம் அணியாதோரிடம் ரூ. 54 கோடி அபராதம் வசூல்

நாட்டிலேயே கொரோனா தொற்றுப் பரவலில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில், மாநிலத்தின் தலைநகரான மும்பையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 26 லட்சத்து 87 ஆயிரத்து 339 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து, கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

;