politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

சாத்தானைத் துரத்திய கடவுளின் சொந்த நாடு!

கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் வெற்றிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். “கேரளா, கடவுளின் சொந்த நாடு. சாத்தானை வெளியேதுரத்தியிருக்கிறது. வாழ்த்துகள் பினராயி விஜயன். வகுப்புவாத மதவெறியைநல்ல ஆட்சி வென்றிருக்கிறது. பெரிய நன்றி. என் அன்பார்ந்த கேரளமே. நீங்கள் இருக்கும் நிலை எனக்குப் பிடித்திருக்கிறது” என்று டுவிட்டரில் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

                                   ***************

பினராயி விஜயன்... ‘பின்றாருய்யா’ விஜயன்!

கேரள சட்டப் பேரவைத் தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள் ளது. இதையொட்டி முதல்வர் பினராயி விஜயனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  பினராயிவிஜயனின் வெற்றியை டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், பினராயி விஜயன் என்பதை ‘பின்றாருய்யா விஜயன்’ என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

                                   ***************

பில்டிங் ஸ்டிராங்.. பேஸ்மெண்ட் வீக்...

தென்னிந்தியாவில் கர்நாடகா தவிர, பாஜகவுக்கு பெரியளவில் உட்கட்டமைப்பு இல்லை. அதனால், தங்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சி.டி. ரவி கூறியுள் ளார். எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் புகுத்தவில்லை. ஆனால், எதிரிகள் எங்களுக்கு எதிராக தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார். வரும் காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்பதை பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்று ரபி கூறியுள்ளார்

                                   ***************

அமித்ஷா பதவி  விலக வேண்டும்!

‘மேற்கு வங்கத் தில் நடைபெற்ற வன்முறைக்கு பொறுப் பேற்று அமித்ஷா ராஜினாமா செய்யவேண் டும் என மம்தா கோரினார். இதற்கு பதில் அளித்த அமித்ஷா மக்கள் என்னிடம் கேட்டால் மட்டுமே நான்ராஜினாமா செய்வேன், என்றார். ஜனநாயகத்தில் தேர்தல் என்பதுதான் மக்களின் தீர்ப்பாகும். இன்று மக்கள் அமித்ஷாவுக்கு எதிராக தீர்ப்பளித்து உள்ளனர். அமித்ஷா அவர்களே நீங்கள்எப்போது ராஜினாமா செய்யப்போகிறீர்கள்?’ என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

                                   ***************

ரிசர்வ் வங்கிக்கு புதிதாக ஒரு துணை ஆளுநர்!

இந்திய ரிசர்வ்வங்கிக்கு ஏற்கெனவே மகேஷ் குமார் ஜெயின், மைக்கேல் பத்ரா, ரஜேஷ்வர் ராவ் ஆகியோர் துணை ஆளுநர்களாக உள்ளனர். இந்நிலையில், 4-ஆவது துணை ஆளுநராக ரபி சங்கர்என்பவரை ரிசர்வ் வங்கி நியமித்துள் ளது. இதற்கு நாடாளுமன்ற நியமனக்குழு தற்போது ஒப்புதல் அளித் துள்ளது. பொருளாதாரத்தில் எம்.பில். பட்டம் பெற்ற ரபி சங்கர், ரிசர்வ் வங்கியில்  ஏற்கெனவே பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

;