politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

ராணுவத்திற்கு அதிகம் செலவிட்ட இந்தியா!

கடந்த 2020-ம் ஆண்டில் அமெரிக்கா தனது ராணுவத்துக்கு 77 ஆயிரத்து 800 கோடி டாலர் செலவிட்டுள்ள நிலையில், சீனா 25 ஆயிரத்து 200 கோடி டாலரும், இந்தியா 7 ஆயிரத்து 290 கோடி டாலரும் செலவிட்டுள்ளன. ஜிடிபி அடிப்படையில் சீனா, தனது ஜிடிபியில் 1.7 சதவிகிதத்தை ஒதுக்கியுள்ள நிலையில், இந்தியா தனது ஜிடிபி-யில் 2.9 சதவிகிதத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. அமெரிக்கா தனது ஜிடிபி-யில் 3.7 சதவிகிதத்தை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.

                                 ***************

கம்பீருக்கு மட்டும் கொரோனா மருந்து கிடைப்பது எப்படி?

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ள நிலையில், பாஜக எம்.பி. கவுதம் கம்பீரால் கொரோனா மருந்துகளை விநியோகிக்கவும், அவற்றை அதிக அளவில்வாங்கவும் எப்படி முடிகிறது? என்று தில்லி உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளது. தங்களின் கேள்விக்குப் பின்னரும்கூட அது நிறுத் தப்படாதது ஏன்? என்றும் நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.

                                 ***************

கொசு அடிக்கும் பேட் இறக்குமதிக்கு தடை! 

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு கொசு அடிக்கும் பேட்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. அதாவது, 121 ரூபாய்க்கும் குறைவான விலைகொண்ட கொசு அடிக்கும் பேட்களைஇந்தியாவில் இறக்குமதி செய்யக்கூடாது என்று அந்நிய வர்த்தகத்துக் கான பொது இயக்குநரகம் தடை விதித்துள்ளது. இதன்படி பேட் ஒன்றின் விலை 121 ரூபாய்க்கு மேல் இருந்தால்தான் இனி இறக்குமதி செய்ய முடியும் என் பது குறிப்பிடத்தக்கது.

                                 ***************

உ.பி. முதல்வருக்கு எதிராக பேசிய துஷார் மேத்தா

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை, ஆக்சிஜன் கிடைப்பதில்லை என்று கூறுவோர் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநிலபாஜக முதல்வர் ஆதித்யநாத் மிரட்டியிருந்தார். இந்நிலையில், பத்திரிகையாளர் சித்திக் கப்பான் வழக்கில், உ.பி.யில் படுக்கைகள், மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவே உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். 

                                 ***************

நீலாம்பூர் யுடிஎப் வேட்பாளர்  வி.வி. பிரகாஷ் காலமானார்

மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், நீலாம்பூர் தொகுதி யுடிஎப் வேட்பாளருமான வி.வி. பிரகாஷ் (55) வியாழனன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். எடகராவில் உள்ள தனது வீட்டிலிருந்து மஞ்சேரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் இறந்தார். வி.வி.பிரகாஷ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா தனது சகோதரரை இழந்து வருந்துவதாக கூறியுள்ளார்.

;