politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

மோடி டி.வி.யில் தோன்றினால் வைரஸ் ஒழிந்து விடாது

‘பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் மீண் டும் மீண்டும் தொலைக் காட்சியில் தோன்றினால் மட்டும் கொரோனா தொற்று ஒழிந்து விடாது. ஏதாவது திட்டம் இருக்க வேண்டும். அது இல்லாமல், முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒரு தலைமை ஆசிரியர் அல்ல!’ என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சாடியுள்ளார். 

                              **************

மன திருப்தியுடன் விடைபெறுகிறேன்...

‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகசிறப்பாக பணியாற் றிய திருப்தியுடனும், மலரும் இனிமையான நினைவுகளுடனும் ஓய்வு பெறுகிறேன். தலைமை நீதிபதியாக பணியாற்றிய போது, எனக்கு சக நீதிபதிகள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். அதனால், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புவழங்க முடிந்தது. கொரோனா பரவல் காலத்திலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளை, காணொலி மூலமாகநீதிபதிகளால் விசாரிக்க முடிந்தது’ என்றுஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கூறியுள்ளார்.

                              **************

விளம்பர செலவுகளை முதலில் நிறுத்துங்கள்... 

‘மத்திய அரசுதன்னை விளம்பரப் படுத்துவதற்கும், தேவையற்ற திட்டங்களுக்கும், செலவிடும் தொகையை நிறுத்திவிட்டு, அந்தத் தொகையை தடுப்பூசிக்கும், ஆக்சிஜனுக்கும் செலவிடலாம். மருத் துவ உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழிவகை செய்யலாம். இனிவரும் நாட்களில் கொரோனா பரவல் இன்னும் தீவிரமாகும். இதை சமாளிக்க இந்த தேசம் தயாராக வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

                              **************

நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இறக்குமதி!

ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை கொள்முதல் செய்துள்ளதாகவும், அவை ஒரு வாரத்தில் இந்தியா வந்து சேரும் என்றும் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. 20 முதல் 25 நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில், ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரத்து 400 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் இந்த கருவிகளை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

                              **************

கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ் வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை முதல் தேதிகளில் அகவிலைப்படி உயர்த்தப் படுவது வழக்கம். இதன்படி 2020 ஜனவரியில் அகவிலைப்படி 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. எனினும் கொரோனாபொதுமுடக்கத்தால் அது அமலுக்கு வரவில்லை. ஜூலை மாதக் கணக்கிற்கான அகவிலைப்படி உயர்த்தப்படவே இல்லை. தற்போது 2020 ஜனவரியில் அறிவித்த அகவிலைப்படி உயர்வையும் நிறுத்தி வைப்பதாக மத்திய பாஜக அரசுஅறிவித்துள்ளது.

;