politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

மோடி கொண்டு வந்திருப்பது தடுப்பூசி பாகுபாட்டுத் திட்டம்!

‘18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு இலவச தடுப் பூசி இல்லை. இந்நிலையில், இடைத்தரகர்கள் எவ்வித விலைக் கட் டுப்பாடும் இல்லாமல் தடுப்பூசிகளை வாங்கிவருகின்றனர். சமூகத்தின் பலவீனமானபிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்கானஎந்த உத்தரவாதமும் இல்லை. இதுமத்திய அரசின் தடுப்பூசி விநியோகத் திட்டம் இல்லை, தடுப்பூசி பாகுபாட்டுத் திட்டம்’ என்று ராகுல் காந்தி சாடியுள் ளார்.

                              *****************

மரணங்களை மறைக்கும் ம.பி. மாநில பாஜக அரசு!

பாஜக ஆளும் உ.பி., ம.பி., குஜராத் போன்ற மாநிலங்கள் கொரோனா உயிரிழப்புக்களை குறைத் துக் காட்டுவதாக தொடர்ந்து குற்றச் சாட்டுக்கள் இருந்து வருகின்றன. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக் கப்பட்டு உயிரிழந்த 94 பேர் போபாலில் எரியூட்டப்பட்ட நிலையில், சிவராஜ் சிங்சவுகான் தலைமையிலான ஆளும் பாஜகஅரசோ அந்த எண்ணிக்கையை வெறும்3 ஆக குறைத்துக் காட்டியதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

                              *****************

ரூ. 5,476 கோடிக்கு நிவாரணம் அறிவித்த உத்தவ் தாக்கரே! 

கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப் பட்டுள்ள மகாராஷ்டிர மாநில மக்களுக்கு, முதல்வர் உத்தவ் தாக்கரே ரூ. 5 ஆயிரத்து 476 கோடிக்கு நிவாரண தொகுப்பை அறிவித்துள்ளார். இதன்படி பதிவு செய் யப்பட்ட 12 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1,500, உரிமம் பெற்றஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ. 1,500, பதிவுசெய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரத்து 500, பல்வேறு ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு அடுத்த 2 மாதங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், 12 லட்சம் ஆதிவாசி குடும்பத்திற்கு மாதம் ரூ. 2 ஆயிரம் நிதியுதவிவழங்கப்பட உள்ளது.

                              *****************

பட்நாவிஸின் 20 வயது மருமகனுக்கு தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே1-ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றுபிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால், மகாராஷ்டிரா மாநில பாஜக-வைச்சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் 20 வயது மருமகன் அதற்குள்ளாகவே இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கியதாக ஏற்கெனவே பட்நாவிஸ் மீதுகுற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக் கது.

                              *****************

1,970 போக்குவரத்து ஊழியர்களை பணி நீக்கிய எடியூரப்பா அரசு

கர்நாடகத்தில் ஏப் ரல் 8 முதல் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களில் 1970 பேரைபணிநீக்கம் செய்துஅம்மாநில பாஜக அரசு பழிவாங்கி
யுள்ளது. மேலும் 2 ஆயிரத்து 941 பேரை பணியிடை நீக்கம் செய்திருப்பதுடன், 7 ஆயிரத்து 666 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸூம் அனுப்பியுள்ளது.

;