politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

மாநில அரசுகள்தான் கொரோனாவுக்கு பொறுப்பு!

‘கொரோனா நோயாளிகளின் எண் ணிக்கை கட்டுக்கடங் காத வகையில் அதிகரித்துக் கொண்டே சென் றால், அது நாட்டின் சுகாதாரக் கட்டமைப் புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்தச் சூழ்நிலையில் நாங்கள் மாநில அரசுகளுக்கு துணை நிற்கிறோம். ஆனால், மாநில அரசுகள்தான், கொரோனா பரவலைக் கட்டுக்குள்  கொண்டுவர வேண்டும்’ என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

                               **************

கொரோனா வைரஸை பட்நாவிஸ் வாயில் போடுவேன்

‘கொரோனா போன்ற துயரங்களில் அரசியல் செய்ய பிரதமர் மோடியும், தேவேந் திர பட்நாவிசும் வெட்கப்பட வேண்டும். இதுவே, மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக இருந்தால், மோடிஇப்படி செய்வாரா? எனது கையில் மட்டும்கொரோனா வைரஸ் கிடைத்தால், அதைதேவேந்திர பட்நாவிஸ் வாயில்தான் போடுவேன். அந்த அளவுக்கு நான் அவரை வெறுக்கிறேன்’ என்று சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியுள்ளார்.

                               **************

வசதியானவர்களுக்கு தடுப்பூசிகளை விற்கலாம்!

பிரதமர் மோடிக்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘கொரோனா தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் விற்க அனுமதிக்க வேண்டும். அதை வசதியானவர்கள் வாங்கிக் கொள்வார்கள். அதன்மூலம், நலிந்த பிரிவினருக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த முடியும்’ என்று நவீன் பட்நாயக் கூறியுள் ளார்.

                               **************

மோடி ராஜினாமா  செய்ய வேண்டும்!

‘சொந்த நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தட்டுப் பாடு நிலவுகிறபோது, தனது சொந்த செல் வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார். தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு அவர்தான் காரணம். எனவே அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேற்குவங்கத்தில் அடுத்த 3 கட்ட தேர்தலில் பெரிய அளவிற்கான கூட்டங்களும் கொரோனா காரணமாக மம்தா கைவிட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

                               **************

இறப்புச் சான்றிதழிலும் பிரதமர் படம் போடலாம்! 

‘மக்கள் தடுப் பூசி செலுத்திக் கொண்டதற்கும், தடுப்பூசியை கொண்டு வந்ததற்கும் தாங்களே காரணம் என மோடி அரசு கூறவிரும்பினால், கொரோனாவால் இறப்பவர் களுக்கும் மோடி அரசுதான் பொறுப் பேற்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மோடி படத்தை போடுவது போல, கொரோனாவால் பலியானவர்களின் இறப்புச் சான்றிதழிலும் மோடி படத்தை போட வேண்டும்’என்று என்சிபி தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் கூறியுள்ளார்.

;