politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

உ.பி.யில் அரங்கேறுவது மனிதாபிமானமற்ற குற்றம்!

‘பல்லியா, காசிப்பூர் பகுதி கங்கையில்உடல்கள் மிதக்கின் றன. உன்னாவ் ஆற்றின் கரையிலும் ஏராளமான சடலங்கள் புதைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்னோ, கோரக்பூர், ஜான்சி, கான்பூர் போன்ற நகரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது. இது மனிதாபிமானமற்றது என்பதோடு, குற்றமாகும்’ என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள் ளார்.

                          ****************

இலவச உணவு... ரூ.3000 உதவித் தொகை!

பஞ்சாப் மாநில கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார். ஏழை - எளிய கொரோனா நோயாளிகள் 181, 112 ஆகிய உதவிஎண்களுக்கு அழைப்பு விடுத்தால், அவர்களுக்கான சமைத்த உணவு காவல்துறை மூலம் வீட்டிற்கே டெலிவரிசெய்யப்படும் என்று கூறியுள்ள முதல்வர், கட்டுமானத் தொழிலாளர் களுக்கு 3000 ரூபாய் உதவித் தொகைவழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

                          ****************

தடுப்பூசி செலுத்துவதில் மகாராஷ்டிரா முதலிடம்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மகா ராஷ்டிரா மாநிலம் முத லிடத்தில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை மகாராஷ்டிரா வில் 1 கோடியே 89 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிராவிற்கு அடுத்தடுத்த இடங்களில் குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம்உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. 

                          ****************

ஆக்சிஜன் ஒதுக்கீட்டில்  மத்திய அரசு பாரபட்சம்!

‘கர்நாடகத்திற்கு 1,200 டன் ஆக்சிஜன் வினியோகம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால் இதுவரை 120 டன் ஆக்சிஜன் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுவே, உ.பி. மாநிலத்திற்கு மட்டும் 1,680 டன் ஆக்சிஜன் தரப்பட்டுள்ளது. ஏன் இந்த பாரபட்சம்?’ என்று மதச்சார்பற்ற ஜனதாதளம்தலைவர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

                          ****************

சத்தீஸ்கர் புதிய சட்டமன்ற  கட்டுமான பணிகள் நிறுத்தம்!

கொரோனாவால் மோசமாக பாதிக்கப் பட்டுள்ள மாநிலங் களில் சத்தீஸ்கரும் ஒன்றாகும். கடந்த ஓராண்டில் 11 ஆயிரத்து 94 பேர் இங்கு இறந்துள்ளனர். தற்போதும் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பு தொடர்ந்து வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவலுக்கு முன்பே- 2019 நவம்பர் 25-இல் துவங்கி நடைபெற்றுவந்த புதிய சட்டப்பேரவை கட்டுமானப் பணிகளை பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

;