politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்...

தேர்தல் விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரச் சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பது, ‘இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் இறையாண்மை மீதானநேரடித் தாக்குதல்’ என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். ‘பாஜக அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டே தேர்தல் ஆணையம் மம்தாவின் பிரச்சாரத்திற்கு தடை விதித்துள்ளது’ என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

                                 ***************

பெட்ரோல் மீது 7 ஆண்டில் 96% அதிகரித்த உற்பத்தி வரி!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற் றும் எரிவாயு மீதான உற்பத்தி வரி கடந்த 7 ஆண்டுகளில் 96 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. 2013-14ம் ஆண்டு ரூ. 12 லட்சத்து 35 ஆயிரத்து 870 கோடியாக இருந்த உற்பத்தி வரி, 2021 ஜனவரியில் ரூ. 24 லட்சத்து 23 ஆயிரத்து 020 கோடியாக அதிகரித்துள்ளது. இதேகாலத்தில் விமானங்களுக்கான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 3 சதவிகிதமே அதிகரித்துள்ளது.

                                 ***************

திருநங்கையர் நலவாரியம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

திருநங்கை யர்க்கான நல்வாழ்வு வாரியம் அமைப்பது குறித்தும், அவர் களுக்கு எதிராக போலீசார் நடத்தும் வன் முறைகளை தடுப்பதற்கு குழு அமைப்பதுகுறித்தும் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்குமாறு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையைச் சேர்ந்ததனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்தவழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது.

                                 ***************

இரவு ஊரடங்கால் என்ன பயன் இருக்கிறது?

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகபரவி வரும் நிலையில்,இரவுநேர ஊரடங்கைஅரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால், இந்த இரவு நேர ஊரடங்கால் என்ன பயன்? என்று முன்னாள்முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான எச்.டி. குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பரவி வரும் இந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பிற தேர்தல்களை அவசியம் நடத்த வேண்டுமா? என்றும் அவர் கேட்டுள்ளார்.

                                 ***************

சந்திரபாபு நாயுடு மீது திருப்பதியில் கல்வீச்சு!

திருப்பதி நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 17 அன்று இடைத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, தெலுங்கு தேசம் கட்சிவேட்பாளர் பனபாக லட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, காந்தி ரோடு கிருஷ்ணாபுரம் டானா என்ற இடத்தில் அவர்மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதில் தொண்டர் ஒருவர் காயம் அடைந்தநிலையில், சந்திரபாபு நாயுடு திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.

;