politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

இது ஆரம்பம்தான்.. இன்னும் சுடுவோம்... 

மேற்கு வங்கத்தின் கூச்பிகார் மாவட்டம் சீதல்குச்சி தொகுதியில் 4 இஸ்லாமிய இளைஞர்கள் துணை ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இந்நிலையில், ‘கெட்ட பசங்கள்’ திருந்தவில்லை என்றால் மத்தியப் படைகள் துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் மேலும் தொடரும் என்றும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே!என்றும், மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மிரட்டல் விடுத்துள்ளார்.

                              ****************

திரிபுரா பழங்குடியினர் கவுன்சில்: பாஜக தோல்வி!

திரிபுரா மாநில பழங்குடியினர் தன்னாட்சிக் கவுன்சில் தேர்தலில், பாஜக தோல்வி அடைந்துள்ளது. மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோத் மாணிக்யா தேப் பர்மன்அண்மையில் துவங்கிய ‘திப்ரா லேண்ட்மாநில கட்சி’ மொத்தமுள்ள 30 இடங்களில் 16 இடங்களைப் பிடித்து வெற்றிபெற்றுள்ளது. ஐஎன்பிடி-க்கு 2 இடங்களும், பாஜக-வுக்கு 9 இடங்களும், சுயேட்சைக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன.

                              ****************

இருமுடிகட்டிச் சென்ற ஆரிப் முகம்மது கான்!

கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், இருமுடி கட்டிச் சென்று சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்துள் ளார். ஞாயிற்றுக் கிழமை மாலை பம்பைவந்த ஆளுநர், அங்குள்ள கணபதி கோயிலில் இருமுடி கட்டி, தனது மகன் கபீர் முகமது கானுடன் சுமார் 6 கி.மீ. நடந்து சென்றார். மாலை 8 மணிக்கு சந்நிதானத்தை அடைந்த ஆளுநருக்கு, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு பிரசாதம் வழங்கினார். 

                              ****************

செங்கார் மனைவிக்கு சீட்? பின்வாங்கியது உ.பி. பாஜக!

உ.பி. மாநிலம் உன்னாவ் பகுதியில் 17 வயதுச் சிறுமியைபாலியல் வன்கொடுமைசெய்த வழக்கில்பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் ஆயுள் தண்டனைக்குஉள்ளானார். அவரின் எம்எல்ஏ பதவிபறிபோனது. இதனிடையே, செங்காரின்மனைவி சங்கீதாவுக்கு பதேபுர் சவுராஸி மாவட்டக் கவுன்சிலர் பதவிக்கு பாஜக‘சீட்’ வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சங்கீதாவுக்கு வாய்ப்பளிக்கும் முடிவிலிருந்து பாஜக தற்போது பின்வாங்கியுள்ளது.

                              ****************

ஓய்வூதியத் துறையிலும் அந்நிய முதலீடு உயர்வு?

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பை 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக அதிகரிப்பதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றம் கடந்த மாதம் அனுமதியளித்தது. இதேபோல, ஓய்வூதியத் துறையிலும் அந்நியமுதலீட்டுக்கான வரம்பு, 74 சதவிகிதமாக உயர்த்தப்படலாம் என்றும் இதற்கான மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும்மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎப் ஆர்டிஏ) (2013) சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ள உள்ளது.

;