politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

அமெரிக்கா போர் ஒத்திகை: மோடி அரசு வேடிக்கை!

அமெரிக்க கடற் படையின் 7-வது ப்ளீட் போர்க்கப்பல் லட்சத் தீவு தீவுகளுக்கு மேற்கே130 கடல் மைல் தொலை வில், இந்தியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் ஊடுருவி ரோந்து சென்றுள்ளது. இந்தஊடுருவல் விஷயமும் கூட, அமெரிக்கா தானாகவே தெரிவித்ததற்குப் பின்னர்தான், மோடி அரசுக்கு தெரியவந் துள்ளது. ஊடுருவல் செய்ததுடன், “ப்ரீடம் ஆப் நேவிகேஷன் ஆபரேஷன்” (FONOP) என்ற பெயரில் ராணுவ ஆபரேஷன் ஒன்றையும் அமெரிக்க போர்க்கப்பல் இந்திய எல்லைக்குள் நடத்தியுள்ளது

                               ******************

ரபேல் ஒப்பந்தத்தில் ரூ. 21 ஆயிரம் கோடி ஊழல்

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், இந்திய இடைத்தரகருக்கு ரூ. 8 கோடியே 62 லட்சம் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ்தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார். ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் எதிர்ப்பு பிரிவுகளை நீக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள சுர்ஜேவாலா, இந்த ஊழலால், அரசின் கஜானாவுக்கு ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

                               ******************

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி ஊசி

சாமியார் ஆதித்யநாத் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தின், ஷாம்லி மாவட் டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சென்ற சரோஜ் (70), அனார்கலி (72), சத்யவதி (60) ஆகிய மூன்று பெண்களுக்கும், வெறிநாய் கடிக்கான ‘ரேபிஸ் தடுப்பூசி’செலுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மருந்தாளுநர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள் ளது.

                               ******************

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கொரோனா தொற்று!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை, மார்ச் 7-ஆம் தேதியேமோகன் பகவத் செலுத்திக் கொண்ட நிலையிலும் அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை, நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனை உறுதி செய்துள்ளது. 70 வயதாகும் பகவத்திற்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

                               ******************

இந்தியா ஹிந்து தேசமாகும்; பாஜக எம்எல்ஏ கொக்கரிப்பு!

உத்தரப் பிரதேசமாநிலம் வாரணாசியில் உள்ள ‘ஞானவாபிமசூதி’ அகற்றப்படும் எனவும், இந்தியா விரைவில் ஹிந்து தேசமாகும் என்றும் பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங்பேசியுள்ளார். ஞானவாபி மசூதி அகற்றப்படும். அந்த இடத்தில் பிரம்மாண்டமான சிவன் கோயில் கட்டப்படும். இது ஹிந்துக்களுக்கு அதிகாரமளிக்கும் காலம் என்றும் அவர் கொக்கரித் துள்ளார். ஆக்ராவில் இருந்த சிவன் கோயிலை இடித்து அந்த இடத்தில் தாஜ் மஹால் கட்டப்பட்டதாகவும், தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் என மாற்ற வேண்டும் என்றும் சுரேந்திரா சிங்சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

;