politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்..

“காவி உடைக்காரர்கள் என்ன அரக்கர்களா..?”

வங்கதேசத்தில் உள்ள காளி கோயிலில் தாம் வழிபட்டதில் என்ன தவறு இருக் கிறது? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார். இதைக் கூட திரிணாமுல் கட்சியினர் விமர்சிப்பதாக கூறியிருக்கும் பிரதமர் மோடி, காவி உடை அணிந்து நெற்றியில் திலகம் இட்டுள்ளவர்களை மேற்குவங்கத்தில் அரக்கர்கள் போல் சித்தரிப்பதாகவும், இதேபோல கேரளத்தில் மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய ஐயப்பபக்தர்களை இடதுசாரி அரசு லத்திகளால்வரவேற்றதாகவும் ‘கண்ணீர்’ விட்டுள்ளார்.

                                    **************

தேர்தல் நேரத்தில் விருது  அறிவித்தது ஏன்?

“ரஜினிகாந்த் திரையுலகில் மிகவும் மதிக்கப்படக்கூடிய நடிகர். அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது நீண்ட காலத்துக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நேரத்தில்இந்த ஆண்டு இந்த விருது ஏன் அறிவிக்கப்பட்டது?” என்று காங்கிரஸ் மூத்ததலைவர் ராஜீவ் சுக்லா கேள்வி எழுப்பியுள்ளார். “ஒவ்வொன்றிலும் அரசியல்ரீதியான ஆதாயங்களை மத்திய அரசு எதிர்பார்த்துச் செயல்படக் கூடாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

                                    **************

மேற்குவங்கத் தேர்தலும் ஒரு பாரதப் போர்தான்...

“தமிழ்நாடு, கேரள மக்களின் மனநிலையை கணிக்க முடிகிறது. ஆனால், அசாம் மற் றும் மேற்கு வங்கத்தில் நடக்கும் தேர்தல்களின் முடிவுகள் தேசிய அரசியலில் அடுத்தக்கட்ட போக்கை தீர்மானிக்கும். மேற்கு வங் கத்தில் நடந்து கொண்டிருக்கும் மகாபாரதம் உண்மையான மகாபாரதத்தை விடமிக கடுமையானது. நாட்டில் ஜனநாயகம் மீதான தாக்குதல் புதியதல்ல. எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்து போராடியே முன்னேறியுள்ளனர்” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

                                    **************

கர்நாடக பாஜகவுக்குள் முட்டல் மோதல்...

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தனக்குத் தெரியாமலேயே தன்னுடைய துறையில் தலையை நுழைக்கிறார் என்று அம்மாநில ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ஆளுநருக்கு புகார் கடிதம் எழுதியிருந்த நிலையில், ஏனைய அமைச்சர் கள் பலரும் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சர்பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக், சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர், வேளாண்துறைஅமைச்சர் பி.சி. பாட்டீல் ஆகியோர் ஈஸ்வரப்பா மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

                                    **************

பெலகாவி இளம்பெண் விஜயபுராவில் குடியேறினார்

கர்நாடக முன்னாள்அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, அரசு வேலைவாங்கித் தருவதாக கூறி இளம்பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தஇளம்பெண், தற்போது பெலகாவியைவிட்டு வெளியேறி விஜயபுரா நிடகுந்தியில் குடியேறியுள்ளனர். எனினும், நாங்கள் இங்கு வர யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை இளம்பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.

;