politics

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

தடுப்பூசி கொள்முதலுக்கு சர்வதேச டெண்டர்

‘உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு, சீரம்மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து தலா 50 லட்சம்தடுப்பூசி டோஸ்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ‘தடுப்பூசி பணிகளை வீரியமாக செயல்படுத்துவதற்காக 4 முதல் 5 கோடி டோஸ்கள் வாங்குவதற்கு சர்வதேச டெண்டர் ஒன்றும் விடப்படும்’என்று அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

                             **************** 

உ.பி.க்கு 93 சதவிகிதம் தில்லிக்கு 54-தான்...

உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு கேட்ட ஆக்சிஜனில் 93 சதவிகிதத்தை ஒதுக்கியுள்ள மத்திய அரசு,தில்லி ஆம் ஆத்மி அரசு கேட்ட ஆக்சிஜனில் வெறும் 54 சதவிகிதத்தையே வழங்கியுள்ளது. அதாவது தில்லிக்கு 378 மெட்ரிக் டன் அளவிற்கும், உத்தரப் பிரதேசத்திற்கு 751 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்துள்ளது. தனது பிரமாணப்பத்திரத்தில் தில்லிக்கான ஒதுக்கீட்டை490 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ள தாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

                     **************** 

முதல் நாளில் 1.33 கோடி பேர் தடுப்பூசிக்காக பதிவு

18 முதல் 44 வயதில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு கோ-வின் (cowin.gov.in)இணையதளத்தில் புதன்கிழமையன்று துவங்கியது இதனிடையே முன்பதிவு செய்வதில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், முதல்நாளில் மட்டும் 1 கோடியே 33 லட்சம்பேர் தடுப்பூசிக்காக பதிவுசெய்துள்ளனர்.

                     **************** 

ஆக்சிஜன் ஆலையை  சூறையாடிய பொதுமக்கள்

உ.பி. மாநிலம் அலிகாரின் எல்லையிலுள்ள காஸிம்பூரில் தனியார் ஆக்சிஜன் தொழிற்சாலை உள்ளது. இங்கு நாளொன்றுக்கு நான்கு டன்கள் வரையில் ஆக்சிஜன் உற்பத்தியாகும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்களை ரூ. 15 ஆயிரத்திற்கு கறுப்புச் சந்தைகளில் விற்பனைசெய்வதாகப் புகார் எழுந்தது. இதனைநேரில் கண்டறிந்த அப்பகுதி பொதுமக்கள், உற்பத்தி நிலையத்தின் உபகரணங்களை அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.

                     **************** 

பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சல்!

பஞ்சாப்பில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில சிறைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான சுக்ஜிந்தர் ரந்தவா ராஜினாமா செய்ததாகவும், அதை முதல்வர் அம்ரீந்தர் சிங் ஏற்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இதனிடையே, அமைச்சரவைக் கூட்டத்தையும் சுக்ஜிந்தர் ரந்தவா புறக்கணித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கு தொடர்ந்துசொந்தக் கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்துவருகிறது. கிரிக்கெட் வீரரும் முன்னாள் எம்.பி.யுமான நவ்ஜோத் சித்து அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராக ஏற்கெனவே தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;